இந்திய அணியுடனான எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்குமான நியூசிலாந்து கிரிக்கெட் குழாமிலிருந்து ஒரு சுழற்பந்துவீச்சாளர் மற்றும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் நீக்கப்பட்டு புதிய இரு வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு கிரிக்கெட் தொடர்களிலும் ஆடி வருகின்றது.
நியூசிலாந்துடனான ஒரு நாள் தொடரினை கைப்பற்றிய இந்திய அணி
சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து ….
சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்றது. தொடரின் முதல் மூன்று போட்டிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்துள்ள நியூசிலாந்து அணி பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றது. இந்திய அணி சொந்த மண்ணில் வைத்து தங்களை வைட் வொஷ் செய்துவிடுமா என்கின்ற பயம் நியூசிலாந்து கிரிக்கெட் அணி மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து அணி தங்களது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் குழாமிலிருந்து எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்கும் அதிரடியாக இரண்டு மாற்றங்களை செய்துள்ளது. இதனை நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவரான கெவின் லார்சென் உறுதிப்படுத்தியுள்ளார்.
நியூசிலாந்தில் நடைபெறும் லீக் தொடர்களில் ஒன்றான பேகர் கிங் சுப்பர் ஸ்மேஷ் தொடரில் பிரகாசித்த இரு வீரர்கள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் தனது அதிரடியை ஆரம்பித்துள்ள ஏபி டி வில்லியர்ஸ்
பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) கிரிக்கெட் …
சுழற்பந்து வீச்சாளரான இஷ் சொதி எஞ்சிய போட்டிகளுக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டு இவரின் இடத்திற்கு மற்றுமொரு சுழற்பந்து வீச்சாளரான டொட் அஸ்டெல் உபாதையிலிருந்து மீண்டு ஒரு வருடகால இடைவெளியின் பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
கடந்த நவம்பரில் பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடரின் குழாமில் இவர் இடம்பெற்றிருந்தாலும், முழங்கால் உபாதை காரணமாக முழு தொடரிலிருந்தும் விலகியிருந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் அறிமுகம் பெற்ற இவர் இதுவரையில் 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
மேலும், குழாமிலிருந்து அடுத்த வீரராக வேகப்பந்து வீச்சாளரான டொக் பிரேஸ்வல் நீக்கப்பட்டு அவரின் இடத்திற்கு பதிலாக சகலதுறை வீரரான ஜிம்மி நேசம் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் சகலதுறை வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்த ஜேசன் ஹோல்டர்
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) வெளியிட்டுள்ள கிரிக்கெட் ….
உபாதையிலிருந்து மீண்டு கடந்த இலங்கை அணியுடனான தொடரின் போது ஒருநாள் அணியில் இடம்பிடித்து அசத்திய இவர் தசைப்பிடிப்பு காரணமாக இந்திய அணியுடனான தொடரில் இருந்து விலகியிருந்தார். இந்நிலையிலேயே ஜிம்மி நேசம் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
28 வயதுடைய சகலதுறை வீரரான ஜிம்மி நேசம் 44 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 934 ஓட்டங்களை குவித்துள்ளார். அத்துடன் பந்துவீச்சில் 40 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இதேவேளை, ஒருநாள் குழாமிலிருந்து விலகிய வீரர்களான இஷ் சொதி மற்றும் டொக் பிரேஸ்வல் ஆகியோர் அந்நாட்டில் நடைபெறும் டி20 லீக் தொடரான பேகர் கிங் சுப்பர் ஸ்மேஷ் தொடரில் விளையாடவுள்ளனர்.
இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டிகள் முறையே ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 3ஆம் திகதி நடைபெறவுள்ளன.
மாற்றத்தின் பின்னரான புதிய குழாம்
கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), டொட் அஸ்டெல், ட்ரென்ட் போல்ட், கொலின் டி கிரேன்ட்ஹோம், லுக்கி பேர்கசன், மார்டின் குப்டில், மெட் ஹென்றி, டொம் லதாம் (விக்கெட் காப்பாளர்), கொலின் முன்ரோ, ஜிம்மி நேசம், ஹென்றி நிக்கொலஸ், மிட்சல் சேன்ட்னர், டிம் சவுத்தி, ரோஸ் டெய்லர்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<