DCL 17 பருவகாலத்திற்கான மூன்றாவது வாரப்போட்டிகளில் அப் கண்ட்ரி லயன்ஸ் மற்றும் கடற்படை அணிகள் முறையே இராணுவப்படை மற்றும் சுபர் சன் அணிகளை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தின.
அப் கண்ட்ரி லயன்ஸ் எதிர் இராணுவப் படை
பலம் மிக்க இராணுவப் படை அணி அப் கண்ட்ரி லயன்ஸ் அணியை வீழ்த்தும் என் பலராலும் எதிர்பார்க்கப்பட்டாலும் அப் கண்ட்ரி லயன்ஸ் அணி இராணுவப்படை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
பிரபல வீரர் மொஹமட் இஸ்ஸடீனின் சேவை இல்லாமல் களமிறங்கிய அணி வழங்கப்பட்ட உள்ளீடுகளை கோலாக்கத் தவறியது.
மறுமுனையில் அப் கண்ட்ரி லயன்ஸ் அணிக்காக அமார்டி எமா முதலாவது கோலை 8ஆவது நிமிடத்தில் போட்டார்.
இராணுவப்படை இந்த அதிர்ச்சியிலிருந்து சுதாரித்துக் கொள்ளும் முன்பே 23ஆவது நிமிடத்தில் அமார்டி எமா இரண்டாவது கோலையும் அடித்தார்.
இராணுவப்படை அணி முதல் பாதியில் தமக்காக ஒரு கோலைப்போட முயற்சி செய்த போதிலும் அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை.
எனினும் இரண்டாவது பாதியை உத்வேகத்துடன் ஆரம்பித்த இராணுவப்படை அணிக்காக மதுஷான் டி சில்வா கோலைப் போட்டார்.
கோல் அடித்த புத்துணர்ச்சியில் தொடர்ந்து பல வாய்ப்புகளை உருவாக்கிய போதிலும் இராணுவப்படையால் இன்னொரு கோலைப் பெற முடியவில்லை.
இறுதியில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் அப் கண்ட்ரி லயன்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது.
முழு நேரம் – அப் கண்ட்ரி லயன்ஸ் விளையாட்டுக் கழகம் 2-1 இராணுவப்படை விளையாட்டுக் கழகம்
ThePapare.com இன் சிறப்பாட்டக்காரர்- அமார்டி எமா (அப் கண்ட்ரி லயன்ஸ் விளையாட்டுக் கழகம்)
கோல் பெற்றவர்கள்
அப் கண்ட்ரி லயன்ஸ் விளையாட்டுக் கழகம் – அமார்டி எமா 08′ , 20′
இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – மதுஷான் டி சில்வா 52′
கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் சுபர் சன் விளையாட்டுக் கழகம்
கடற்படை மற்றும் சுபர் சன் அணிகள் இரண்டும் தமது முந்திய போட்டிகளில் தோல்வியுற்றதால் இப்போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக அமைந்தது.
ஆரம்பம் முதலே இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கிய போதிலும் அவற்றை கோலாக்கத் தவறின.
பலம் மிக்க ப்ரில்லியன்டை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது சனிமவுண்ட்
மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் அம்பாறை..
எனினும் 37ஆவது நிமிடத்தில் மொஹமட் ஷஹீல், உள்ளனுப்பப்பட்ட பந்தை தலையால் முட்டி கோலாக்கினார்.
இரண்டாவது பாதியின் முதலாவது நிமிடத்திலேயே கோலைப்போட்டு சுபர் சன் அணிக்கு அதிர்ச்சி அளித்தது கடற்படை விளையாட்டுக் கழகம். நிர்மால் விஜயகுணவர்தன தனக்கு கிடைத்த வாய்ப்பை லாவகமாக கோலாக்கினார்.
எனினும் 53ஆவது நிமிடத்தில் தமது முதல் கோலைப் போட்டது சுபர் சன் விளையாட்டுக் கழகம். க்வாபேனா பொன்சூ, ஆபிஸ் ஒலயெமி (Afis Olayem) அடித்த பிரி கிக் உதையை கோலாக்கினார்.
அதன் பின்பு சுதாரித்த கடற்படை விளையாட்டுக் கழக பின்கள வீரர்கள், உள்ளனுப்பப்பட்ட வாய்ப்புகள் அனைத்தையும் தடுக்க 2-1 என்ற கோல்கள் கணக்கில் கடற்படை விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.
முழு நேரம் – கடற்படை விளையாட்டுக் கழகம் 2-1 சுபர் சன் விளையாட்டுக் கழகம்
ThePapare.com இன் சிறப்பாட்டக்காரர்- ஆபிஸ் ஒலயெமி (சுபர் சன் விளையாட்டுக் கழகம்)
கோல் பெற்றவர்கள்
கடற்படை விளையாட்டுக் கழகம் – மொஹமட் ஷஹீல் 37′, நிர்மால் விஜயதுங்க 46′
சுபர் சன் விளையாட்டுக் கழகம் – க்வாபேனா பொன்சூ 53′
மஞ்சள் அட்டை
கடற்படை விளையாட்டுக் கழகம்- நிர்மால் விஜயதுங்க 12′, மதுரங்க பெரேரா 53′
சுபர் சன் விளையாட்டுக் கழகம் – ஆபிஸ் ஒலயெமி 85′, மொஹமட் ஹபீல் 85′, மொஹமட் பாஹிம் 89′