இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் இன்று (28) நடைபெற்ற போட்டிகளில் ஜப்னா மற்றும் காலி அணிகள் வெற்றிகளை பதிவுசெய்துள்ளன.
கண்டி அணியை எதிர்கொண்ட நடப்புச் சம்பியன் ஜப்னா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற, தம்புள்ள அணியை எதிர்கொண்ட காலி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.
இன்றைய நாள் போட்டிகளை பொருத்தவரை கண்டி அணியின் சந்துன் வீரக்கொடி மற்றும் அசேல் சிகேராவும், ஜப்னா அணியின் நவோத் பரணவிதான, நிஷான் மதுஷ்க, ஜனித் லியனகே மற்றும் கசுன் அபேரட்ன ஆகியோரும் தம்புள்ள அணியின் சொனால் தினூஷவும், காலி அணியின் சொஹான் டி லிவேராவும் அரைச் சதங்களைப் பதிவு செய்தனர்.
அதேபோல, பந்துவீச்சில் காலி அணியின் மிலன் ரத்நாயக மற்றும் ஜப்னா அணியின் ஷிரான் பெர்னாண்டோ ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
- தம்புள்ள அணிக்காக 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷான் பிரியன்ஜன்
- லசித் குரூஸ்புள்ளே சதமடிக்க; சகலதுறையிலும் பிரகாசித்த லஹிரு சமரகோன்
- லஹிரு உதார, அஹானின் சிறப்பாட்டத்தால் கண்டிக்கு முதல் வெற்றி
இதனிடையே, கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரின் போது உபாதைக்குள்ளாகி சத்திரசிகிச்சை செய்து கொண்ட இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான துஷ்மந்த சமீர, உபாதையிலிருந்து பூரண குணமடைந்த நிலையில் சுமார் 5 மாத கால இடைவெளிக்குப் பிறகு தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் களமிறங்கினார்.
ஜப்னா அணிக்கெதிராக இன்று நடைபெற்ற போட்டியில் கண்டி அணிக்காக ஆடிய அவர், 6 ஓவர்கள் பந்துவீசி 40 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார்.
ஜப்னா எதிர் கண்டி
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில், சகலதுறையிலும் பிரகாசித்த ஜப்னா அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி சந்துன் வீரக்கொடி, அசேல் சிகேரா ஆகியோரின் துடுப்பாட்ட பங்களிப்புடன் 49.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சந்துன் வீரக்கொடி 72 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அவருக்கு அடுத்தப்படியாக அசேல் சிகேரா 61 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஷிரான் பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், திலும் சுதீர மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய ஜப்னா அணியை பொருத்தவரை முன்வரிசை வீரர்களான நவோத் பரணவிதான (82), நிஷான் மதுஷ்க (52), கசுன் அபேரட்ன (54) மற்றும் ஜனித் லியனகே (53) ஆகிய நால்வரினதும் அரைச் சதங்களின் உதவியுடன் 39.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இதன்மூலம் ஜப்னா அணி இம்முறை தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் 3ஆவது வெற்றியைப் பதிவுசெய்ய, கண்டி அணி 3ஆவது தோல்வியை சந்தித்தது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Niroshan Dickwella | c Janith Liyanage b Lahiru Madushanka | 27 | 23 | 4 | 0 | 117.39 |
Oshada Fernando | c Ravindu Fernando b Navod Paranavithana | 18 | 25 | 0 | 1 | 72.00 |
Sandun Weerakkody | c Ravindu Fernando b Jeffrey Vandersay | 62 | 72 | 6 | 2 | 86.11 |
Lahiru Udara | c Ravindu Fernando b Dilum Sudeera | 39 | 64 | 2 | 0 | 60.94 |
Ahan Wickramasinghe | lbw b Jeffrey Vandersay | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Asel Sigera | c & b Shiran Fernando | 50 | 61 | 3 | 1 | 81.97 |
Movin Subasingha | c Lahiru Madushanka b Shiran Fernando | 25 | 23 | 2 | 2 | 108.70 |
Pulina Tharanga | lbw b Shiran Fernando | 4 | 3 | 1 | 0 | 133.33 |
Ashian Daniel | b Dilum Sudeera | 4 | 13 | 0 | 0 | 30.77 |
Chamika Gunasekara | c Nishan Madushka b Shiran Fernando | 2 | 8 | 0 | 0 | 25.00 |
Dushmantha Chameera | not out | 4 | 5 | 0 | 0 | 80.00 |
Extras | 14 (b 0 , lb 5 , nb 0, w 9, pen 0) |
Total | 249/10 (49.4 Overs, RR: 5.01) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shiran Fernando | 9.4 | 0 | 62 | 4 | 6.60 | |
Lahiru Madushanka | 9 | 0 | 44 | 1 | 4.89 | |
Ravindu Fernando | 5 | 0 | 29 | 0 | 5.80 | |
Navod Paranavithana | 6 | 1 | 13 | 1 | 2.17 | |
Janith Liyanage | 3 | 0 | 15 | 0 | 5.00 | |
Dilum Sudeera | 7 | 0 | 31 | 2 | 4.43 | |
Jeffrey Vandersay | 10 | 0 | 50 | 2 | 5.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Navod Paranavithana | st Niroshan Dickwella b Movin Subasingha | 82 | 68 | 13 | 0 | 120.59 |
Nishan Madushka | c Asel Sigera b Chamika Gunasekara | 52 | 46 | 6 | 1 | 113.04 |
Kasun Abeyratne | not out | 54 | 69 | 4 | 0 | 78.26 |
Janith Liyanage | b Pulina Tharanga | 53 | 53 | 1 | 3 | 100.00 |
Ravindu Fernando | not out | 6 | 1 | 0 | 1 | 600.00 |
Extras | 4 (b 0 , lb 0 , nb 1, w 3, pen 0) |
Total | 251/3 (39.2 Overs, RR: 6.38) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dushmantha Chameera | 6 | 0 | 40 | 0 | 6.67 | |
Chamika Gunasekara | 5 | 0 | 42 | 1 | 8.40 | |
Ashian Daniel | 5 | 0 | 46 | 0 | 9.20 | |
Asel Sigera | 9 | 1 | 48 | 0 | 5.33 | |
Pulina Tharanga | 9.2 | 0 | 53 | 1 | 5.76 | |
Movin Subasingha | 5 | 0 | 22 | 1 | 4.40 |
தம்புள்ள எதிர் காலி
இம்முறை தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள தம்புள்ள அணி, காலி அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் முதல் தோல்வியை சந்தித்தது.
கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தம்புள்ள அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய தம்புள்ள அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த அபிஷேக் லியனாரச்சி மற்றும் மினோத் பானுக ஆகிய இருவரும் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். தொடர்ந்து வந்த பவன் ரத்நாயக 14 ஓட்டங்களுடனும், கமிந்து மெண்டிஸ் 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
எனினும், தம்புள்ள அணியின் பின்வரிசை வீரர்களும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், சொனால் தினூஷ நிதானமாக ஆடி பெற்றுக் கொண்ட அரைச் சதத்தின் உதவியுடன் தம்புள்ள அணி, 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்த 200 ஓட்டங்களை எடுத்தது.
தம்புள்ள அணி சார்பில் அதிகபட்சமாக சொனால் தினுஷ 116 பந்துகளில் 62 ஓட்டங்களையும், லசித் அபேரட்ன 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, பந்துவீச்சை பொருத்தவரை மிலன் ரத்நாயக 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், அகில தனன்ஜய 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 201 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி அணி இளம் வீரர் சொஹான் டி லிவேராவின் அரைச் சதத்தின் உதவியுடன் 33.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
காலி அணிக்காக அபாரமாக துடுப்பெடுத்தாடிய சொஹான் டி லிவேரா ஒரு சிக்ஸர் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 71 பந்துகளில் 76 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Abishek Liyanarachchi | c Praveen Jayawickrama b Milan Rathnayake | 0 | 11 | 0 | 0 | 0.00 |
Minod Bhanuka | run out (Akila Dananjaya) | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Pavan Rathnayake | st Sohan de Livera b Akila Dananjaya | 14 | 16 | 3 | 0 | 87.50 |
Kamindu Mendis | b Akila Dananjaya | 3 | 8 | 0 | 0 | 37.50 |
Lasith Abeyrathne | lbw b Akila Dananjaya | 37 | 55 | 1 | 0 | 67.27 |
Sonal Dinusha | c Sohan de Livera b Milan Rathnayake | 62 | 116 | 4 | 0 | 53.45 |
Dushan Hemantha | c Kavishka Anjula b Ramesh Mendis | 29 | 37 | 2 | 0 | 78.38 |
Ranitha Liyanarachchi | b Ramesh Mendis | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Chamindu Wijesinghe | c Ramesh Mendis b Milan Rathnayake | 24 | 23 | 1 | 1 | 104.35 |
Duvindu Tillakaratne | c Ramesh Mendis b Milinda Siriwardana | 17 | 27 | 2 | 0 | 62.96 |
Nuwan Thushara | not out | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Extras | 12 (b 0 , lb 7 , nb 0, w 5, pen 0) |
Total | 200/10 (49.5 Overs, RR: 4.01) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Milan Rathnayake | 8.5 | 1 | 41 | 4 | 4.82 | |
Kavishka Anjula | 4 | 1 | 12 | 0 | 3.00 | |
Akila Dananjaya | 10 | 0 | 38 | 3 | 3.80 | |
Nimesh Vimukthi | 9 | 1 | 33 | 0 | 3.67 | |
Ramesh Mendis | 10 | 1 | 37 | 2 | 3.70 | |
Praveen Jayawickrama | 8 | 0 | 32 | 0 | 4.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sohan de Livera | lbw b Dushan Hemantha | 76 | 71 | 9 | 1 | 107.04 |
Vishad Randika | c Lasith Abeyrathne b Ranitha Liyanarachchi | 34 | 32 | 6 | 0 | 106.25 |
Pasindu Sooriyabandara | c Minod Bhanuka b Duvindu Tillakaratne | 41 | 49 | 1 | 2 | 83.67 |
Lakshan Edirisinghe | c Pavan Rathnayake b Dushan Hemantha | 25 | 37 | 1 | 0 | 67.57 |
Nimesh Vimukthi | st Minod Bhanuka b Duvindu Tillakaratne | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Ramesh Mendis | not out | 9 | 7 | 0 | 0 | 128.57 |
Pathum Kumara | not out | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Extras | 13 (b 0 , lb 0 , nb 1, w 12, pen 0) |
Total | 201/5 (33.5 Overs, RR: 5.94) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nuwan Thushara | 3 | 0 | 23 | 0 | 7.67 | |
Chamindu Wijesinghe | 3 | 0 | 24 | 0 | 8.00 | |
Ranitha Liyanarachchi | 3 | 0 | 13 | 1 | 4.33 | |
Sonal Dinusha | 4 | 0 | 23 | 0 | 5.75 | |
Kamindu Mendis | 3 | 0 | 19 | 0 | 6.33 | |
Duvindu Tillakaratne | 9.5 | 0 | 51 | 2 | 5.37 | |
Dushan Hemantha | 8 | 0 | 48 | 2 | 6.00 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<