Home Tamil சந்திமாலின் சதத்ததுடன் காலி அணிக்கு 4ஆவது வெற்றி

சந்திமாலின் சதத்ததுடன் காலி அணிக்கு 4ஆவது வெற்றி

231

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் இன்று (14) நடைபெற்ற போட்டிகளில் ஜப்னா மற்றும் காலி அணிகள் வெற்றிகளை பதிவுசெய்துள்ளன.

இம்முறை போட்டித்தொடரில் இந்த இரண்டு அணிகளும் தத்தமது 4ஆவது வெற்றிகளை பதிவுசெய்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

காலி அணிக்காக தனது முதல் போட்டியில் ஆடிய தினேஷ் சந்திமால் சதமடித்து அசத்த, அந்த அணியின் பசிந்து சூரிய பண்டார 98 ஓட்டங்களைக் குவித்து சதமடிக்கும் வாய்ப்பை 2 ஓட்டங்களால் தவறவிட்டார்.

இதனிடையே, கண்டி அணியின் ஓசத பெர்னாண்டோ, ஜப்னா அணியின் கசுன் அபேரட்ன, லஹிரு மதுசங்க மற்றும் கொழும்பு அணியின் அஷேன் பண்டார ஆகியோர் அரைச் சதங்களைப் பதிவு செய்தனர்.

காலி எதிர் கண்டி

கொழும்பு பி. சரா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சகலதுறையிலும் பிரகாசித்த ரமேஷ் மெண்டிஸ் தலைமையிலான காலி அணி 79 ஓட்டங்களால் வெற்றியை பெற்றுக்கொண்டது.

கண்டி அணியின் பணிப்புரைக்கு அமைய இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணிக்கு சொஹான் டி லிவேரா 10 ஓட்டங்களுடனும், தொடர்ந்து வந்த லக்ஷான் எதிரிசிங்க ஓட்டமின்றியும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

எனினும், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தினேஷ் சந்திமாலின் அபார சதம் மற்றும் பசிந்து சூரியபண்டாரவின் அரைச் சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்களைப் பெற்;றுக்கொண்டது.

காலி அணி சார்பில் அதிகபட்சமாக தினேஷ் சந்திமால் 2 சிக்ஸர்கள், 9 பௌண்டரிகள் அடங்கலாக 146 பந்துகளில் 111 ஓட்டங்களையும், பசிந்து சூரியபண்டார 4 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகள் அடங்கலாக 104 பந்துகளில் 98 ஓட்டங்களையும், ரமேஷ் மெண்டிஸ் 2 சிக்;ஸர்கள், 4 பௌண்டரிகள் அடங்கலாக 24 பந்துகளில் 42 ஓட்டங்களை அதிகபட்சமாக குவித்தனர்.

கண்டி அணியின் பந்துவீச்சை பொருத்தவரை வனுஜ சஹன் குமார 2 விக்கெட்டுகளை அதிபட்சமாக வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி அணியை பொருத்தவரை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் ஓசத பெர்னாண்டோ தவிர எந்தவொரு துடுப்பாட்ட வீரரும் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை. இதனால் அந்த அணி 35.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.

சந்தகன், தினூஷவின் அபாரத்தால் தம்புள்ள அணிக்கு 6ஆவது வெற்றி

கண்டி அணி சார்பாக அதிகபட்சமாக ஓசத பெர்னாண்டோ 60 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுக்க, காலி அணியின் பந்துவீச்சில் அசங்க மனோஜ் 4 விக்கெட்டுகளையும், அகில தனன்ஜய 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இந்த தோல்வியின் மூலம் கண்டி அணி இம்முறை தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் 5ஆவது தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.


Result


Team Kandy
189/10 (35.4)

Team Galle
268/5 (50)

Batsmen R B 4s 6s SR
Sohan de Livera lbw b Amshi De Silva 10 16 0 1 62.50
Dinesh Chandimal not out 111 146 9 2 76.03
Lakshan Edirisinghe b Nipun Ransika 0 2 0 0 0.00
Pasindu Sooriyabandara c Niroshan Dickwella b Wanuja Sahan 98 104 7 4 94.23
Pathum Kumara b Thanuka Dabare 0 3 0 0 0.00
Dhananjaya Lakshan c & b Wanuja Sahan 2 5 0 0 40.00
Ramesh Mendis not out 42 24 4 2 175.00


Extras 5 (b 0 , lb 1 , nb 0, w 4, pen 0)
Total 268/5 (50 Overs, RR: 5.36)
Bowling O M R W Econ
Nipun Ransika 9 1 56 1 6.22
Amshi De Silva 7 0 44 1 6.29
Wanuja Sahan 10 1 49 2 4.90
Sachindu Colombage 10 0 48 0 4.80
Ashian Daniel 5 0 25 0 5.00
Thanuka Dabare 9 0 45 1 5.00


Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella c Pasindu Sooriyabandara b Dhananjaya Lakshan 36 15 4 3 240.00
Oshada Fernando c Lakshan Edirisinghe b Asanka Manoj 60 71 7 1 84.51
Sandun Weerakkody b Akila Dananjaya 9 10 2 0 90.00
Lahiru Udara c Sohan de Livera b Praveen Jayawickrama 0 1 0 0 0.00
Thanuka Dabare lbw b Akila Dananjaya 7 4 0 1 175.00
Ahan Wickramasinghe lbw b Akila Dananjaya 0 7 0 0 0.00
Wanuja Sahan lbw b Ramesh Mendis 17 33 2 0 51.52
Amshi De Silva c Vishad Randika b Asanka Manoj 22 29 3 0 75.86
Ashian Daniel c Akila Dananjaya b Asanka Manoj 8 25 0 0 32.00
Sachindu Colombage not out 9 14 0 1 64.29
Nipun Ransika c Milan Rathnayake b Asanka Manoj 4 7 0 0 57.14


Extras 17 (b 0 , lb 1 , nb 2, w 14, pen 0)
Total 189/10 (35.4 Overs, RR: 5.3)
Bowling O M R W Econ
Milan Rathnayake 4 0 53 0 13.25
Akila Dananjaya 9 2 27 3 3.00
Dhananjaya Lakshan 2 0 22 1 11.00
Praveen Jayawickrama 9 0 34 1 3.78
Ramesh Mendis 5 0 24 1 4.80
Asanka Manoj 6.4 0 28 4 4.38



ஜப்னா எதிர் கொழும்பு

கசுன் அபேரட்னவின் அரைச் சதம் மற்றும் லஹிரு மதுசங்கவின் சகலதுறை ஆட்டத்தின் உதவியால் கொழும்பு அணிக்கெதிரான போட்டியில் 25 ஓட்டங்களால் ஜப்னா அணி வெற்றியீட்டியது.

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான நிஷான் மதுஷ்க 6 ஓட்டங்களுடனும், நவோத் பரணவிதான 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.

எனினும், 3ஆம் இலக்கத்தில் களமிறங்கிய கசுன் அபேரட்ன மற்றும் பின்வரிசையில் களமிறங்கி வேகமாக ஓட்டங்களைக் குவித்த லஹிரு மதுசங்க ஆகியோரது அரைச் சதங்களின் உதவியால் ஜப்னா அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 231 ஓட்டங்களைக் குவித்தது.

ஜப்னா அணியின் துடுப்பாட்டத்தில் லஹிரு மதுசங்க 5 பௌண்டரிகளுடன் 79 பந்துகளில் 72 ஓட்டங்களையும், கசுன் அபேரட்ன 7 பௌண்டரிகளுடன் 79 பந்துகளில் 69 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு அணியின் பந்துவீச்சில் நுவன் பிரதீப் 3 விக்கெட்டுகளையும், துஷான் விமுக்தி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

232 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி, எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.

கொழும்பு அணியின் துடுப்பாட்டத்தில் அஷேன் பண்டார 71 பந்துகளில் 60 ஓட்டங்களையும், அவிஷக் பெர்னாண்டோ 38 ஓட்டங்களையும், அணித்தலைவர் நிபுன் தனன்ஜய 35 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுக்க, ஜப்னா அணியின் பந்துவீச்சில் லஹிரு மதுசங்க 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், பினுர பெர்னாண்டோ மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தினர்.

இந்த தோல்வியின் மூலம் கொழும்பு அணி இம்முறை தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் 4ஆவது தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.


Result


Team Colombo
206/10 (47.2)

Team Jaffna
231/8 (50)

Batsmen R B 4s 6s SR
Nishan Madushka c & b Nuwan Pradeep  6 12 1 0 50.00
Navod Paranavithana b Isitha Dew Wijesundara 4 4 0 0 100.00
Kasun Abeyratne c Danushka Sandaruwan b Dushan Vimukthi 69 79 7 0 87.34
Ron Chandraguptha  c Sithara Gimhana b Nuwan Pradeep  0 2 0 0 0.00
Janith Liyanage c & b Prabath Jayasuriya 20 40 2 0 50.00
Lahiru Madushanka c Avisha Fernando b Udith Madushan 72 79 5 0 91.14
Ravindu Fernando  lbw b Dushan Vimukthi 6 12 1 0 50.00
Dilum Sudeera  not out 38 65 2 0 58.46
Shiran Fernando  c Prabath Jayasuriya b Nuwan Pradeep  8 7 1 0 114.29


Extras 8 (b 2 , lb 0 , nb 0, w 6, pen 0)
Total 231/8 (50 Overs, RR: 4.62)
Bowling O M R W Econ
Nuwan Pradeep  9 0 35 3 3.89
Isitha Dew Wijesundara 8 0 39 1 4.88
Udith Madushan 7 0 46 1 6.57
Prabath Jayasuriya 10 0 42 1 4.20
Sachitha Jayathilake 10 1 29 0 2.90
Dushan Vimukthi 6 0 38 2 6.33


Batsmen R B 4s 6s SR
Avisha Fernando b Dilum Sudeera  38 34 6 1 111.76
Sithara Gimhana c Dilum Sudeera  b Binura Fernando 0 4 0 0 0.00
Lakshitha Manasinghe run out (Kasun Abeyratne) 22 36 2 0 61.11
Dushan Vimukthi c Nishan Madushka b Shiran Fernando  8 30 0 0 26.67
Ashen Bandara c Jeffrey Vandersay  b Lahiru Madushanka 60 71 3 1 84.51
Nipun Dhananjaya c Dilum Sudeera  b Shiran Fernando  35 65 0 0 53.85
Sachitha Jayathilake c Shiran Fernando  b Lahiru Madushanka 15 18 1 0 83.33
Isitha Dew Wijesundara c Nishan Madushka b Lahiru Madushanka 3 6 0 0 50.00
Prabath Jayasuriya b Binura Fernando 11 12 1 0 91.67
Udith Madushan not out 5 5 0 0 100.00
Nuwan Pradeep  c Janith Liyanage b Lahiru Madushanka 1 3 0 0 33.33


Extras 8 (b 0 , lb 3 , nb 0, w 5, pen 0)
Total 206/10 (47.2 Overs, RR: 4.35)
Bowling O M R W Econ
Binura Fernando 9 0 35 2 3.89
Shiran Fernando  10 0 50 2 5.00
Navod Paranavithana 10 0 35 0 3.50
Dilum Sudeera  5 0 22 1 4.40
Lahiru Madushanka 7.2 0 33 4 4.58
Jeffrey Vandersay  3 0 16 0 5.33
Ravindu Fernando  3 0 12 0 4.00



 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<