Home Tamil காலி அணிக்காக சதமடித்து அசத்திய ரமேஷ், பெதும்

காலி அணிக்காக சதமடித்து அசத்திய ரமேஷ், பெதும்

National Super League 2023

253
National Super League 2023

பெதும் குமார, ரமேஷ் மெண்டிஸ், லக்ஷான் எதிரிசிங்க மற்றும் அஞ்சலோ மெதிவ்ஸ் ஆகியோரது சதங்கள், தினேஷ் சந்திமாலின் அரைச் சதம் மற்றும் கவிஷ்க அன்ஜுல, ரமேஷ் மெண்டிஸ் பந்துவீச்சின் மூலம் சகலதுறையிலும் பிரகாசித்த காலி அணி, கொழும்பு அணிக்கு எதிரான போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டது.

எனவே, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ரமேஷ் மெண்டிஸ் தலைமையிலான காலி அணி முதல் இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகிய இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி, அவிஷ்க பெர்னாண்டோவின் சதம் (150) மற்றும் நிசல தாரகவின் அரைச் சதத்தின் (82) உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 405 ஓட்டங்களைக் குவித்தது.

காலி அணியின் பந்துவீச்சில் கவிஷ்க அன்ஜுல 4 விக்கெட்டுகளையும், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இந்த நிலையில், போட்டியின் கடைசி நாளான நேற்றைய தினம் 5 விக்கெட்டுக்களை இழந்து 439 ஓட்டங்களுடன் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த காலி அணி, பெதும் குமார மற்றும் ரமேஷ் மெண்டிஸின் அபார சதங்களின் உதவியுடன் 9 விக்கெட் இழப்பிற்கு 703 ஓட்டங்களை எடுத்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைய போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

காலி அணியின் துடுப்பாட்டத்தில் பெதும் குமார சதம் கடந்த 151 ஓட்டங்களை அதிபட்சமாக எடுக்க, அணித் தலைவர் ரமேஷ் மெண்டிஸ் (149), லக்ஷான் எதிரிசிங்க (129) மற்றும் அஞ்சலோ மெதிவ்ஸ் (105) ஆகிய மூவரும் சதங்களை விளாசியிருந்தனர். அத்துடன், தினேஷ் சந்திமால் (63) அரைச் சதமொன்றை அடித்து வலுச்சேர்த்தார்.

கொழும்பு அணியின் பந்துவீச்சில் உதித் மதுஷான் மற்றும் துஷான் விமுக்தி ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

இதன்படி, நான்காவது வாரத்துக்காக நடைபெற்ற போட்டிகளின் முடிவில் காலி அணி முதலிடத்தையும், கண்டி அணி 2ஆவது இடத்தையும், ஜப்னா அணி 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொள்ள, கடைசி இரு இடங்களை முறையே தம்புள்ள மற்றும் கொழும்பு ஆகிய அணிகள் பிடித்துள்ளன.

Result

Match drawn

Team Galle
703/9 (201)

Team Colombo
405/10 (129.5)

Batsmen R B 4s 6s SR
Avisha Fernando lbw b Sangeeth Cooray 150 205 21 1 73.17
Dimuth Karunaratne lbw b Kavishka Anjula 4 9 1 0 44.44
Heshan Fernando b Kavishka Anjula 2 6 0 0 33.33
Roshane Silva c Angelo Mathews b Mohammad Shiraz 4 16 0 0 25.00
Dushan Vimukthi c Pathum Kumara b Asanka Manoj 40 112 6 0 35.71
Manoj Sarathchandra c Pathum Kumara b Ramesh Mendis 9 42 0 0 21.43
Nisala Tharaka lbw b Kavishka Anjula 82 166 7 0 49.40
Prabath Jayasuriya c Dinesh Chandimal b Kavishka Anjula 15 47 1 0 31.91
Tharindu Ratnayaka c Lakshan Edirisinghe b Ramesh Mendis 28 38 3 2 73.68
Kasun Rajitha not out 34 70 4 0 48.57
Udith Madushan lbw b Ramesh Mendis 18 70 3 0 25.71


Extras 19 (b 8 , lb 8 , nb 2, w 1, pen 0)
Total 405/10 (129.5 Overs, RR: 3.12)
Bowling O M R W Econ
Kavishka Anjula 24 2 67 4 2.79
Mohammad Shiraz 25 6 76 1 3.04
Asanka Manoj 19 2 80 1 4.21
Nimesh Vimukthi 30 7 76 0 2.53
Ramesh Mendis 28.5 2 81 3 2.84
Sangeeth Cooray 3 0 9 1 3.00


Batsmen R B 4s 6s SR
Hashan Dumindu b Udith Madushan 9 17 1 0 52.94
Sangeeth Cooray c Roshane Silva b Tharindu Ratnayaka 33 32 6 0 103.12
Lakshan Edirisinghe lbw b Dushan Vimukthi 129 236 16 1 54.66
Angelo Mathews lbw b Prabath Jayasuriya 105 202 11 0 51.98
Dinesh Chandimal b Nisala Tharaka 63 99 4 2 63.64
Pathum Kumara c Manoj Sarathchandra b Udith Madushan 151 262 12 0 57.63
Ramesh Mendis b Tharindu Ratnayaka 149 256 13 1 58.20
Kavishka Anjula lbw b Dushan Vimukthi 17 23 2 0 73.91
Nimesh Vimukthi lbw b Dushan Vimukthi 5 39 0 0 12.82
Mohammad Shiraz not out 12 33 2 0 36.36
Asanka Manoj not out 1 9 0 0 11.11


Extras 29 (b 10 , lb 7 , nb 2, w 10, pen 0)
Total 703/9 (201 Overs, RR: 3.5)
Bowling O M R W Econ
Kasun Rajitha 8 0 39 0 4.88
Udith Madushan 22.3 3 93 2 4.17
Tharindu Ratnayaka 43 2 201 1 4.67
Nisala Tharaka 24.3 2 82 1 3.37
Prabath Jayasuriya 53 8 142 1 2.68
Dushan Vimukthi 49 9 122 3 2.49
Heshan Fernando 1 0 7 0 7.00



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<