நாளை ஆரம்பமாகும் நெஷனல் சுபர் லீக் – முதல்தர தொடர்

321

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஒழுங்கு செய்திருக்கும் நெஷனல் சுபர் லீக் தொடரின் நான்கு நாட்கள் கொண்ட முதல்தரக் கிரிக்கெட் தொடர், நாளை (23) ஆரம்பமாகின்றது.

இலங்கை கிரிக்கெட் சபையின் தொழில்நுட்பக் குழு வழங்கிய ஆலோசனைக்கு அமைய ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த நெஷனல் லீக் தொடர், கடந்த வாரம் ஒருநாள் போட்டிகளாக நடைபெற்று நிறைவுற்றிருந்ததுடன் அந்த தொடரின் சம்பியன்களாக ஜப்னா அணி நாமம் சூடியிருந்தது.

>>நெஷனல் சுபர் லீக் தொடர் இம்மாத இறுதியில் (thepapare.com)

முன்னர் அறிவிக்கப்பட்டதனை போன்று நெஷனல் சுபர் லீக் ஒருநாள் தொடரின் பின்னர் நான்கு நாட்கள் கொண்ட முதல்தரத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இந்த நான்கு கொண்ட தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் அணிக்குழாம்கள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நான்கு நாட்கள் கொண்ட தொடரில் ஒருநாள் தொடர் போன்று ஐந்து மாவட்ட அணிகள் பங்கெடுக்கவுள்ளதோடு, குறித்த மாவட்ட அணிகள் இலங்கையின் பிரபல்யமிக்க உள்ளூர் கிரிக்கெட் கழக வீரர்கள் மூலமும், இலங்கை 19 வயதின் கீழான கிரிக்கெட் அணி வீரர்கள் மூலமும் நிரப்பப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் ஒருநாள் தொடர் போன்று கண்டி மாவட்டத்தினை பிரதிநிதித்துவம் செய்கின்ற அணி, கமிந்து மெண்டிஸ் மூலம் வழிநடாத்தப்பட, கொழும்பு அணியின் தலைவராக சம்மு அஷான் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

மறுமுனையில் ஜப்னா அணியின் தலைவராக விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் சதீர சமரவிக்ரமவும், காலி அணியின் தலைவராக தனன்ஞய லக்ஷானும், தம்புள்ளை அணியின் தலைவராக மினோத் பானுக்கவும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்த தொடரின் முதல் நாளுக்கான போட்டிகளில் நாளை (23) காலி அணி கண்டி அணியினை காலி சர்வதேச மைதானத்தில் வைத்து எதிர்கொள்ள, மற்றைய போட்டியில் ஜப்னா அணி, கொழும்பு அணியினை ஹம்பாந்தோட்டையில் வைத்து எதிர்கொள்கின்றது.

>>டயலொக்-SLC தேசிய சுப்பர் லீக்கின் சம்பியனாக முடிசூடியது ஜப்னா! (thepapare.com)

நான்கு நாட்கள் கொண்ட முதல்தர தொடரின் போட்டிகள் ஹம்பாந்தோட்டை, காலி சர்வதேச மைதானம் தவிர கண்டி, மற்றும் தம்புள்ளை ஆகிய இடங்களிலும் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த நான்கு நாட்கள் கொண் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் மார்ச் மாதம் 31ஆம் திகதியும், இறுதிப் போட்டி ஏப்ரல் மாதம் 07ஆம் திகதியும் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அணிக்குழாம்கள்

கண்டி – கமிந்து மெண்டிஸ் (அணித்தலைவர்), நிரோஷன் டிக்வெல்ல, பெதும் நிஸ்ஸங்க, லசித் குரூஸ்புள்ளே, கமில் மிஷார, ஒசத பெர்னாண்டோ, சஹான் ஆராச்சிகே, லஹிரு உதார, திக்ஷில டி சில்வா சாமிக்க கருணாரட்ன, லஹிரு குமார, துஷ்மன்த சமீர, சாமிக்க குணசேகர, அசித்த பெர்னாண்டோ, அஷைன் டேனியல், அவின்து தீக்ஷன, லசன்த ருக்மல், புலின தரங்க, சசிந்து கொலம்பகே, லசித் எம்புல்தெனிய, மதிஷ பத்திரன, ருமெஷ் புத்திக, கசுன் விதுர அதிகாரி, டில்ஹான் கூரே, நிப்புன் ரன்சிக்க

கொழும்பு – சம்மு அஷான் (அணித்தலைவர்), தசுன் ஷானக்க, சித்தார கிம்ஹான, செவோன் டேனியல், சரித் அசலன்க, தனுஷ்க குணத்திலக்க, கிரிஷான் சஞ்சுல, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், நிபுன் தனன்ஞய, நுவனிது பெர்னாண்டோ, அஷேன் பண்டார, ரொஷேன் சில்வா, ப்ரமோத் மதுவன்த, சசிந்த ஜயத்திலக்க, லஹிரு மதுசங்க, கலன பெரேரா, ஹிமேஷ் ராமநாயக்க, பிரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க, கவிந்து நதீஷன், கசுன் ராஜித, நிசால தாரக்க, சாமிக்க எதிரிசிங்க, கவின்து நதீஷான், RPN பிரியதர்ஷன, திமுத் கருணாரட்ன

ஜப்னா – சதீர சமரவிக்ரம (அணித்தலைவர்), நிஷான் மதுஷ்க, லஹிரு திரிமான்ன, நவோத் பரணவிதான, ஜனித் லியனகே, சந்துஷ் குணத்திலக்க, இஷான் ஜயரட்ன, ரவிந்து பெர்னாண்டோ, நுவன் பிரதீப், பினுர பெர்னாண்டோ, ஜெப்ரி வன்டர்சே, திலும் சுதீர, சமிந்த பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன், நிபுன் மாலிங்க, கசுன் மதுசங்க, பிரிமோஷ் பெரேரா, துனித் வெலால்கே, கீத் குமார, விமுக்தி பெரேரா, சஷிக துல்ஷான், கல்ஹார சேனாரட்ன, தனன்ஞய டி சில்வா, சிரான் பெர்னாண்டோ

காலி – தனன்ஞய லக்ஷான் (அணித்தலைவர்), அஞ்சலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், ரமேஷ் மெண்டிஸ், பிரவீன் ஜயவிக்ரம, மகீஷ் தீக்ஷன, அகில தனன்ஞய, நிமேஷ் விமுக்தி, சுமின்த லக்ஷான், பிரியமால் பெரேரா, கவிஷ்க அஞ்சுல, ஜெஹான் டேனியல், மொஹமட் சிராஸ், மொஹமட் சமாஸ், சலின்த உஷான், சங்கீத் கூரே, ஹசான் துமின்து,  பப்சார வடுகே, முதித லக்ஷான், கவின்த குலசேகர, சானக்க ருவன்சிறி, ஹெசான் ஹெட்டியாராச்சி, டில்சான் மதுசன்க, சலன டி சில்வா, ரவிந்து திலகரட்ன

தம்புள்ளை –  மினோத் பானுக்க (அணித்தலைவர்), ரொன் சந்திரகுப்தா, பவன் ரத்நாயக்க, லியோ பிரான்சிஸ்கோ, பவன் பத்திராஜ, அஷான் பிரியஞ்சன், ரணுத சோமரட்ன, சோனால் தினுஷ, பானுக்க ராஜபக்ஷ, லசித் அபேய்ரத்ன, வனிந்து ஹஸரங்க, சமீர சந்தமால், துஷான் ஹேமன்த, விஷ்வ பெர்னாண்டோ, நுவான் துஷார, அனுக் பெர்னாண்டோ, லஹிரு சமரக்கோன், துவிந்து திலகரட்ன, அம்ஷி டி சில்வா, லக்ஷான் சண்டகன், மலிந்த புஷ்பகுமார, சமிந்து விஜேசிங்க

தொடர் அட்டவணை

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<