நெஷனல் சுபர் லீக் தொடர் இம்மாத இறுதியில்

854

இலங்கையின் முன்னணி கிரிக்கெட் தொடராக கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த, நெஷனல் சுபர் லீக் (NSL) இம்மாதம் 24ஆம் திகதி முதன்முறையாக ஆரம்பமாகின்றது.

KL ராகுலினை உள்வாங்கியுள்ள லக்னோவ் அணி

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) தொழில்நுட்பக் குழு வழங்கியிருந்த ஆலோசனைக்கு அமைய கடந்த ஆண்டு இலங்கையின் கிரிக்கெட் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டு நெஷனல் சுபர் லீக் தொடர் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளாகவும், நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டிகளாகவும் நடைபெறவுள்ள நெஷனல் சுபர் லீக் தொடரில் இலங்கையின் முன்னணி கிரிக்கெட் கழகங்களினைச் சேர்ந்த வீரர்கள் 100 பேர் கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, தம்புள்ளை மற்றும் காலி என ஐந்து பிரதேசங்களுக்குரிய  அணிகளைப் பிரதிநிதித்துவம் செய்யவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி இலங்கையின் முன்னணி கிரிக்கெட் கழகங்கள் 26 உம், அதன் வீரர்களும் பின்வரும் அட்டவணைக்கு அமைவாக பிரதேச அணிகளுக்காக பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றது.

கண்டி கொழும்பு யாழ்ப்பாணம் காலி தம்புள்ளை
NCC SSC தமிழ் யூனியன் கி.க. கோல்ட்ஸ் கி.க. CCC
சிலாபம் மேரியன்ஸ் கி.க. செரசன்ஸ் வி.க. ராகம கி.க. இராணுவப்படை வி.க. BRC
ஏஸ் கெபிடல் கி.க. நீர்கொழும்பு கி.க. லங்கன் கி.க. பாணதுறை வி.க. கடற்படை வி.க.
விமானப்படை வி.க. செபஸ்டியனைட்ஸ் கி.க. களுத்துறை நகர கழகம் காலி கி.க. பதுரெலிய கி.க.
கண்டி சுங்க வி.க. பொலிஸ் வி.க. புளூம்பீல்ட் கி.க. சோனகர் கி.க. குருநாகல் இளையோர் கி.க.
நுகேகொடை வி.க.

இதேநேரம் NCC, SSC, CCC, தமிழ் யூனியன் மற்றும் கோல்ட்ஸ் ஆகிய கிரிக்கெட் கழகங்கள் அவை கொண்டிருக்கும் வசதிகளின் அடிப்படையில் தாம் இடம்பெற்றிருக்கின்ற பிரதேச அணிக்குரிய குழுவின் மத்திய நிலையமாக (Center of Excellence) செயற்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இம்மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நெஷனல் சுபர் லீக் தொடர் ஒருநாள் போட்டிகளாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, அந்த தொடரின் இறுதிப் போட்டி பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு இலகு வெற்றி

நெஷனல் சுபர் லீக் ஒருநாள் போட்டிகளாக நடைபெற்ற பின்னர் நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அணிக்குழாம்கள்

கண்டி – கமிந்து மெண்டிஸ் (அணித்தலைவர்), நிரோஷன் டிக்வெல்ல, பெதும் நிஸ்ஸங்க, லசித் குரூஸ்புள்ளே, கமில் மிஷார, ஒசத பெர்னாண்டோ, சஹான் ஆராச்சிகே, லஹிரு உதார, விஷ்வ சத்துரங்க, அஞ்சலோ பெரேரா, திக்ஷில டி சில்வா, சத்துரங்க டி சில்வா, சாமிக்க கருணாரட்ன, லஹிரு குமார, துஷ்மன் சமீர, சாமிக்க குணசேகர, அசித்த பெர்னாண்டோ, அஷைன் டேனியல், லசன்த ருக்மல், புலின தரங்க, சசிந்து கொலம்பகே

கொழும்பு – தசுன் ஷானக்க (அணித்தலைவர்), சரித் அசலன்க (பிரதி தலைவர்), தனுஷ்க குணத்திலக்க, கிரிஷான் சஞ்சுல, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், நிபுன் தனன்ஞய, சம்மு அஷான், நுவனிது பெர்னாண்டோ, அஷேன் பண்டார, ரொஷேன் சில்வா, சசிந்த ஜயத்திலக்க, லஹிரு மதுசங்க, கலன பெரேரா, ஹிமேஷ் ராமநாயக்க, மொஹமட் டில்ஷான், பிரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க, கவிந்து நதீஷன்

யாழப்பாணம் – தனன்ஞய டி சில்வா (அணித்தலைவர்), சதீர சமரவிக்ரம (பிரதி தலைவர்), நிஷான் மதுஷ்க, லஹிரு திரிமான்ன, நவோத் பரணவிதான, ஜனித் லியனகே, சந்துஷ் குணத்திலக்க, இஷான் ஜயரட்ன, ரவிந்து பெர்னாண்டோ, சுரங்க லக்மால், நுவன் பிரதீப், பினுர பெர்னாண்டோ, ஜெப்ரி வன்டர்சே, திலும் சுதீர, சமிந்த பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பிரமோத் மதுஷன், நிபுன் மாலிங்க, கசுன் மதுசங்க

காலி – அஞ்சலோ மெதிவ்ஸ் (அணித்தலைவர்), தினேஷ் சந்திமால் (பிரதி தலைவர்), அஷான் ரன்திக்க, முதித லக்ஷான், ஹிமாஷ லியனகே, அசேல குணரட்ன, விஷாத் ரன்திக்க, தனன்ஞய லக்ஷான், ரமேஷ் மெண்டிஸ், பிரவீன் ஜயவிக்ரம, மகீஷ் தீக்ஷன, அகில தனன்ஞய, நிமேஷ் விமுக்தி, சுமின்த லக்ஷான், பிரியமால் பெரேரா, கவிஷ்க அஞ்சுல, ஜெஹான் டேனியல், மொஹமட் சிராஸ், மொஹமட் சமாஸ் 

தம்புள்ளை – அஷான் பிரியஞ்சன், மினோத் பானுக்க, கயான் மனீஷன், ரொன் சந்திரகுப்தா, பவன் ரத்நாயக்க, சோனால் தினுஷ, பானுக்க ராஜபக்ஷ, லசித் அபேய்ரத்ன, வனிந்து ஹஸரங்க, சமீர சந்தமால், துஷான் ஹேமன்த, விஷ்வ பெர்னாண்டோ, நுவான் துஷார, அனுக் பெர்னாண்டோ, லஹிரு சமரக்கோன், துவிந்து திலகரட்ன, அம்ஷி டி சில்வா

பயிற்றுவிப்பாளர்கள்

  • கண்டி – மலிந்த வர்ணபுர, பியல் விஜேதுங்க, தினுக் ஹெட்டியாராச்சி, சனுக்க திசாநாயக்க
  • கொழும்பு – ருவின் பீரிஸ், தம்மிக்க சுதர்ஷன, தர்ஷன கமகே
  • யாழ்ப்பாணம் – திலின கண்டம்பி, சஜித் பத்திரன, கயான் விஜேகோன்
  • காலி – ஜெஹான் முபாரக், சம்பத் பெரேரா, சம்மில பெரேரா
  • தம்புள்ளை – அவிஷ்க பெர்னாண்டோ, உபுல் சந்தன, சமன் ஜயந்த, சஜீவ வீரக்கோன் 

போட்டி அட்டவணை

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<