தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் 30 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா மாத்தறையில் வெள்ளிக்கிழமை (26) ஆரம்பமானது. கடும் மழை காரணமாக மைதானம் சேறும் சகதியுமாக காணப்பட்டதால் முதல் நாள் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
ஆண்டு தோறும் நடைபெறும் இந்த விளையாட்டு விழா பாடசாலை மற்றும் தேசிய அளவிலான வீர, வீராங்கனைகளுக்கு பாலமாக உள்ளது. இந்த போட்டிகள் 20 வயதுக்கு உட்பட்ட மற்றும் 20 வயதுக்கு மேற்பட்ட 28 வயது எல்லை கொண்ட இரு வயது மட்டங்களில் நடைபெறுகின்றன. இந்த விளையாட்டு விழாவின் மற்றொரு சிறப்பம்சம் போட்டியில் வெற்றி பெறுபவர் அதே போட்டியில் அடுத்து ஆண்டு பங்கேற்க முடியாது அதில் தகுதிபெற ஓர் ஆண்டை ஒத்தி வைக்க வேண்டும்.
இங்கிலாந்துடனான T20 போட்டியிலிருந்து விலகும் அகில தனன்ஜய, குசல் பெரேரா
சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையே நாளை…
கடும் மழைக்கு மத்தியில் போட்டி தடைப்படும் நெருக்கடிக்கு இடையிலும் ஆரம்ப நாளில் (26) மூன்று போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. இந்த மூன்று சாதனைகளும் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் நிலைநாட்டப்பட்டன.
மாத்தளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர் விளையாட்டு விழாவில் பங்கேற்ற அருண தர்ஷன 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியை 21.16 வினாடிகளில் முடித்த எஸ். பெரேராவின் போட்டி சாதனையை முறியடித்தார். ஈரலிப்பு தன்மை கொண்ட தடத்தில் ஓடிய அருண 21.33 வினாடிகளில் போட்டியை முடித்ததோடு அருணவுக்கு நெருக்கமாக சவால் கொடுத்த பசிந்து கொடிக்கார குருணாகலயை பிரதிநிதித்துவப்படுத்தி 22.13 வினாடிகளில் போட்டியை முடித்து முந்தைய சாதனையை முறியடித்தார். இந்த இருவர்கள் தவிர்த்து களுத்துறை மாவட்டத்தின் சுராஜ் காவிந்த 22.54 வினாடியில் போட்டியை முடித்து மூன்றாவது இடத்திற்கு வந்தார்.
20 வயதுக்கு உட்பட்ட உயரம் பாய்தலில், காலியில் இருந்து தரிந்து தசுன் புதிய போட்டி சாதனையை படைத்து 2.12 மீற்றர் உயரம் பாய்ந்தார். அவர் முந்தைய சாதனையான ஆர்.ஏ.டீ.ஓ கருணாரத்ன 2013 ஆம் ஆண்டு 2.11 மீற்றர் உயரம் பாய்ந்து நிலைநாட்டிய சாதனையையே முறியடித்தார். புத்தளத்தில் இருந்து பீ.எஸ்.டீ. பெர்னாண்டோ மற்றும் மொனராகலையின் டி.எம்.பி.டி. கௌஷல்ய முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பெற்றதோடு இருவரும் 1.95 மீற்றர் உயரத்தை எட்டினர்.
சச்சினின் உலக சாதனைக்கு மிரட்டல் விடுக்கும் கோஹ்லியின் பத்தாயிரம்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதனை 10,000 ஓட்டங்களை…
முதல் நாளில் எட்டப்பட்ட இறுதிப் போட்டி சாதனை 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் படைக்கப்பட்டது. புத்தளம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இசுரு லக்ஷான் தகுதிகாண் சுற்றில் முந்தைய சாதனையை விடவும் 1:55.20 வினாடிகள் முன்னிலை பெற்றார். இந்த சாதனையை முன்னர் பதுளை மாவட்டத்தில் இருந்து கே. குஷாந்த படைத்திருந்தார். எவ்வாறாயின் இந்த போட்டியின் இறுதிப் போட்டியில் லக்ஷான் சேறும் சகதியுமான தடத்தில் மெதுவாக 1:56.46 நேரத்திலேயே போட்டியை முடித்தார். பதுளையின் சி. அரவிந்த 2:00.39 நேரத்தில் போட்டியை முடித்து இரண்டாவது இடத்தையும் கம்பஹாவில் இருந்து சசிந்து தேஷான் 2:01.16 நேரத்தில் பூர்த்தி செய்து மூன்றாவது இடத்தை பெற்றனர்.
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க