தேசிய நீச்சல் போட்டிகளில் விஷாகா மற்றும் ஜோசப் கல்லூரிகளுக்கு வெற்றி

339
National Swimming

சுகாததாச உள்ளக அரங்கில் தொடர்ந்து இரண்டு நாட்களாக நடைபெற்ற தேசிய நீச்சல் போட்டிகளில் விஷாகா வித்தியாலயம் மற்றும் புனித ஜோசப் கல்லூரி வெற்றிபெற்றது.

இரண்டு அணிகளும் முதலாம் நாள் முடிவின் போதே முன்னிலையில் காணப்பட்டது. இரண்டாம் நாளிலும் தனது வெற்றி ஓட்டத்தை தொடர்ந்த இரு அணிகளும் அதிக புள்ளி வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பெண்களுக்கான போட்டிகளில் சாம்பியனான விஷாகா வித்தியாலயம் மொத்தமாக 70 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது. இரண்டாவது இடத்தைப் பிடித்த மலையகத்தை சேர்ந்த பிரபல கல்லூரியான  மஹாமாயா கல்லூரி 36 புள்ளிகளை மாத்திரமே பெற்றது. ஆண்களுக்கான போட்டிகளில் 61 புள்ளிகளைப் பெற்ற புனித ஜோசப் கல்லூரி கிண்ணத்தை வென்றது. இரண்டாவது இடத்தைப் பிடித்த புனித பீட்டர்ஸ் கல்லூரி 31 புள்ளிகளை மட்டுமே பெற்றது.

விஷாகா வித்தியாலத்தை சேர்ந்த வீராங்கனையான ரமுதி சமரகோன் 15 வயதிற்குட்பட்ட போட்டிகளில் 100 மீட்டர் பிரீஸ்டைல் உள்ளடங்கலாக இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றுக்கொண்டார். சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் வீராங்கனையான வினோலி கழுஆராச்சி முதலாம் நாளில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின் இரண்டாம் நாளில் தனது திறமையை வெளிக்காட்டி 17 வயதிற்குட்பட்ட போட்டிகளில் 100 மீட்டர் பிரீஸ்டைல் மற்றும் 50 மீட்டர் பெக்ஸ்ட்ரோக் ஆகியவற்றில் தங்கம் வென்றார்.

இப்போட்டிகளில் சிறந்த வீரராகக் காணப்பட்ட ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்ற புனித பீட்டர்ஸ் கல்லூரியைச் சேர்ந்த அகலங்க பீரிஸ் ஆவர். அவர் தாம் பங்குபற்றிய அனைத்து போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். முதலாம் நாளில் இரண்டு தங்கம் வென்ற அவர், இரண்டாம் நாளில் 17 வயதிற்குட்பட்ட போட்டிகளில் 100 மீட்டர் பிரீஸ்டைல்  மற்றும் 50 மீட்டர் பெக்ஸ்ட்ரோக் ஆகியவற்றில் தங்கம் உள்ளடங்கலாக மொத்தம் 4 தங்கப் பதக்கங்களை வென்றார்.

19 வயதிற்குட்ற்பட்ட போட்டிகளில் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் இமேஷ் சதுரங்க மற்றும் நாலந்த கல்லூரியின் திலங்க ஷெஹான் ஆகியோருக்கிடையில் கடும் போட்டி காணப்பட்டது. ஷெஹான் 100 மீட்டர் பிரீஸ்டைல் போட்டியை வென்றதோடு, 30.59 செக்கன்களில் முடித்து 50 மீட்டர் பெக்ஸ்ட்ரோக் போட்டியில் 2ஆம் இடத்தைப் பிடித்தார். 29.09 செக்கன்களில் 50 மீட்டர் பெக்ஸ்ட்ரோக் போட்டியை நிறைவு செய்த இமேஷ் சதுரங்க அப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

வினோலி சிறிவர்தன மஹாமாயா கல்லூரிக்காக தனித்து நின்று போராடி பெருமை சேர்த்தார். இவர் 19 வயதிற்குட்பட்ட 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி வகையிலான போட்டி மற்றும் பெக்ஸ்ட்ரோக் போட்டிகளில் தங்கம் வென்றார்.

விஷாகா வித்தியாலயம் அனைத்து ரிலே போட்டிகளிலும் தங்கம் வென்று புதிய சாதனை பிடித்தது. இரண்டாம் நாளில் 15, 17, 19 வயதிற்குட்பட்ட 200 மீட்டர் பிரீஸ்டைல் ரிலே போட்டிகளில் விஷாகா அணி தொடர்ந்து வெற்றிபெற்றது. ஒரு கல்லூரி, ஒரே நாளில் 3 ரிலே போட்டிகளில் வெற்றிபெற்றமை ஒரு அரிதான சம்பவமாகும்.

புனித ஜோசப் கல்லூரி 200 மீட்டர் பிரீஸ்டைல் ரிலே போட்டியில் தங்கம் வெல்வதற்கான வாய்ப்பு காணப்பட்ட பொழுதிலும் அதைத் தவறவிட்டது. இரண்டாம் நாளில் இறுதிப் போட்டியான 17 வயத்திற்குட்பட்ட ரிலே போட்டியில் வத்தலை லைசியம் கல்லூரி வெற்றிபெற்றதன் மூலம் இரண்டாம் நாள் முடிவிற்கு வந்தது.

கண்டி திரித்துவக் கல்லூரி 19 வயதிற்குட்பட்ட போட்டிகளில் சம்பியனானது. 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துக்கொண்டதன் மூலம் புனித  ஜோசப் கல்லூரி போட்டிகளின் கிண்ணத்தை சுவீகரித்தது.

இறுதி புள்ளிகள் அட்டவணை (பெண்கள்):

1 விஷாகா வித்தியாலயம் – 70
2 மகாமாயா கல்லூரி கண்டி – 36
3 சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயம் – 26
4 ஹரிச்சந்திரா கல்லூரி நீர்கொழும்பு – 17
5 லைசியம் சர்வதேச கல்லூரி வத்தளை – 15
6 மகளிர் கல்லூரி கொழும்பு – 11
6 லைசியம் சர்வதேச கல்லூரிநுகேகொட – 11
8 அவே மரியா நீர்கொழும்பு – 10
9 ஹில்வூட் கல்லூரி கண்டி – 07
10 ஹோலி பெமிலி கான்வென்ட் – 06

இறுதி புள்ளிகள் அட்டவணை (ஆண்கள்):

1 புனித ஜோசப் கல்லூரி – 61
2 புனித பீட்டர்ஸ் கல்லூரி – 31
3 ஆனந்த கல்லூரி – 30.50
4 லைசியம் சர்வதேச கல்லூரி வத்தளை – 21
5 திரித்துவக் கல்லூரி கண்டி – 19
6 ரோயல் கல்லூரி – 17
7 நாலந்த கல்லூரி – 12
8 டி எஸ் சேனநாயக்க கல்லூரி – 08
9 லைசியம் சர்வதேச கல்லூரி இரத்தினபுரி – 05
9 செயின்ட் அந்தோணி கல்லூரி கண்டி – 05