அகில இலங்கை பாடசாலைகள் அஞ்சலோட்டப் போட்டிகளின் இரண்டாவது நாள் போட்டிகள் நிறைவில் வளல ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம் பெண்கள் பிரிவிலும், கலப்பு பிரிவிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4×800m அஞ்சலோட்டம் மற்றும் 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கலப்பு அஞ்சலோட்டம் என அனைத்திலும் தங்கப் பதக்கங்களை அள்ளிக் குவித்தது.
யாழ் மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் மேல் மாகாண பாடசாலைகள்
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ அனுசரணையுடன் 2 ஆவது தடவையாக ஏற்பாடு..
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ அனுசரணையுடன் 2ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை பாடசாலைகள் அஞ்சலோட்டப் போட்டிகள் இம்முறை முதற்தடவையாக யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இம்பெற்று வருகின்றன.
ஏற்கனவே, நேற்றைய முதல் நாள் போட்டிகளின் நிறைவில் மேல் மாகாணப் பாடசாலைகள் ஆதிக்கம் செலுத்திய நிலையில், இன்றைய இரண்டாவது நான் போட்டிகளில் வளல ரத்னாயக்க கல்லூரி தனித்து நின்று வெற்றிகளைக் குவித்து தொடரிலும் முன்னிலையில் உள்ள பாடசாலையாக விளங்குகின்றது.
வளல ரத்னாயக்க, கந்தான டி மெசனொட் மற்றும் அம்பாரை டி எஸ் சேனனாயக்க கல்லூரிகள் அண்மைக்காலமாக மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகளில் மிக வேகமான வளர்சி கண்டு வரும் நிலையிலேயே இன்று வளல ரத்னாயக்க வீரர்கள் இந்த தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
இந்நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வுகள் நாளை காலை 8.30 முதல் 3.20 வரை இடம்பெறவுள்ளன. நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளார்.
இன்றைய போட்டி முடிவுகள்
4×800 ஆண்கள் இறுதிப் போட்டி
U18 – 1)ரத்நாயக்க ம.ம.வி 2)சென். சில்வெஸ்ரர்ஸ் கல்லூரி 3)சென். ஜோசப் வாஸ் கல்லூரி
U20 – 1)ரத்நாயக்க ம.ம.வி 2)மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 3) புனித பேதுரு கல்லூரி
4×800 பெண்கள் இறுதிப் போட்டி முடிவுகள்
U18 – 1)ரத்நாயக்க ம.ம.வி 2)ஸ்ரீ ரத்மலானை ம.வி 3) வெலிமட மத்திய கல்லூரி
U20 – 1)ரத்நாயக்க ம.ம.வி 2)வெலிமட மத்திய கல்லூரி 3)அம்பகஸ்டோவ ம.க
கலப்பு அஞ்சலோட்டம் – பெண்கள்
U20 – 1)இரத்நாயக்க ம.ம.வி 2)அம்பாகமுவ ம.க 3) சுமண மகளிர் வித்தியாலயம்
கல்லூரிகளின் நிலை
ஆண்கள்
- சென் பெனடிக்ட் கல்லூரி – 30 புள்ளிகள்
- மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – 29 புள்ளிகள்
- திரித்துவக் கல்லூரி மற்றும் இரத்நாயக்க ம.ம.வி – 20 புள்ளிகள்
5.புனித பேதுரு கல்லூரி – 19
பெண்கள்
- இரத்நாயக்க ம.ம.வி – 42
- சுமண மகளிர் வித்தியாலயம் – 21
- சேர் ஜோன் கொத்தலாவல ம.வி – 20
- அம்பாகமுவ ம.ம.வி – 17
- வெலிமட ம.ம.வி – 15
கலப்பு
- இரத்நாயக்க ம.ம.வி – 62
- சேர் ஜோன் கொத்தலாவல வி – 18
- வெலிமட ம.ம.வி – 18
- அம்பாகமுவ ம.ம.வி – 17
- தர்மபால கல்லூரி – 12
நாளை 4×50, 4×200, 4×400 மற்றும் கலப்பு அஞ்சல் போட்டிகளானது இடம்பெறவுள்ளன.