முரளியிடம் பந்துவீச்சு ஆலோசனைகளை நாடும் லியன்

370
Nathan Lyon to seek advice from Muttiah Muralitharan

அவுஸ்திரேலிய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர் நெதன் லியன் இலங்கையின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனிடம் பந்துவீச்சு பயிற்சி மற்றும் ஆலோசனைகளைப் பெறத்திட்டமிட்டுள்ளார்.

ஜூலை மாதம் இலங்கையில் இடம்பெறும் 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 டி20 சர்வதேசப் போட்டிகளைக் கொண்ட தொடருக்கு ஆயத்தமாகி தனது பந்துவீச்சை மேலும் மேம்படுத்துவதற்காகவே  அவர் முரளியை நாடவுள்ளார்.

லியன் கிரிக்கட் அவுஸ்திரேலியா வலையத்தளத்திற்கு கூறுகையில்முரளி இந்திய துணைக் கண்டத்தில் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்று கூறியிருந்தார். அதனால் நான் முரளியிடம் பந்துவீச்சுப் பயிற்சிகளைப் பெற எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எமக்கு அவரின் ஆலோசனைகளைப் பயிற்சிக் களத்தில் பெறமுடியும் என்றால் அது நன்றாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.

2011ஆம் ஆண்டு காலி சர்வதேச மைதானத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான 28 வயதான  நெதன் லியன் தற்போது வரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 32.87 என்ற பந்துவீச்சு சராசரியில் 195 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

200 விக்கட்டுகளைக் கைப்பற்ற இன்னும் 5 விக்கட்டுகள் பின்னிலையில் உள்ள லியன் அந்த 5 விக்கட்டுகளைக் கைப்பற்றுவதன் மூலம் 200 விக்கட்டுகளை கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணியைச் சேர்ந்த முதலாவது சுழற்பந்து வீச்சாளர் (ஓப் ஸ்பின்னர்) என்ற பெருமையைப் பெறுவார் என்பது முக்கிய விடயமாகும்