இள வயதில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த நசீம் ஷாஹ்

146
PCB

ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2 ஆவது இன்னிங்சில் நசீம் ஷாஹ் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்தார்.

பாகிஸ்தான் வீரர் மொஹமட் சமி 2002 ஆம் ஆண்டில் ஹெட்ரிக் சாதனை நிகழ்த்திய பிறகு தற்போது நசீம் ஷாஹ் பாகிஸ்தானுக்காக ஹெட்ரிக் சாதனை நிகழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சச்சித்ர சேனநாயக்க ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சகலதுறை வீரரான சச்சித்ர சேனநாயக்க…

இந்த உலக சாதனையை பங்களாதேஷ் அணியின் 19 வயதுடைய சுழல் பந்துவீச்சாளர் அலோக் கபாலி 2003 ஆம் ஆண்டில் பெஷாவரில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தியிருந்தார். 

பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 233 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி, பாபர் அசாம் மற்றும் ஷான் மசூதின் அபார சதங்களின் உதவியுடன் 445 ஓட்டங்களை எடுத்தது.

இதன்படி போட்டியின் 3 ஆவது நாளான இன்று (9) 212 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் பங்களாதேஷ் அணி 2 ஆவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடியது. 

போட்டியின் 41 ஆவது ஓவரை நசீம் ஷாஹ் வீசினார். இந்த ஓவரின் 4 ஆவது பந்தில் நஜ்முல் ஹொசைன் சான்டோ 38 ஓட்டங்கள் எடுத்த நிலையில் LBW முறையில் ஆட்டமிழந்தார். 

அடுத்த பந்தில் தைஜுஉல் இஸ்லாமையும் LBW மூலம் வெளியேற்றினார். கடைசி பந்தில் மஹ்முதுல்லாவின் விக்கெட்டை வீழ்த்தி ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

இதன் மூலம் இளம் வயதில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இவர் இரண்டாவது இன்னிங்சில் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஹெட்ரிக் விக்கெட் எடுத்த நான்காவது வீரராகவும் அவர் இடம்பிடித்தார். 

இதற்குமுன் மொஹமட் சமி, அப்துல் ரசாக் மற்றும் வசீம் அக்ரம் ஆகியோர் ஹெட்ரிக் விக்கெட்டினைக் கைப்பற்றியுள்ளனர். 

இதனிடையே, 16 வயதுடைய நசீம் ஷாஹ், பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிய 9 ஆவது இளம் வீரராக இடம்பிடித்துள்ளதுடன், இதற்கு முன்பு ஹசன் ராசா 1996 ஆம் ஆண்டில் 14 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்காக அறிமுகமானதே இதுவரை உலக சாதனையாக உள்ளது.

இறுதியில் பங்களாதேஷ் அணி இன்றைய மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ஓட்டங்களை எடுத்து தடுமாறி வருகிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<