கிரிக்கெட் போட்டிகளில் சிவப்பு அட்டை பெற்று வெளியேறிய முதல் வீரர்

423

கிரிக்கெட் போட்டிகளில் வீரர் ஒருவருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்ட முதல் சம்பவம் கரீபியன் பிரீமியர் லீக் (CPL) T20 தொடரில் போட்டிகளில் பதிவாகியிருக்கின்றது.

>> ஆசியக் கிண்ணத்துடன் கைகோர்க்கும் பி-லவ் கண்டி அணி

அண்மையில் CPL T20 தொடரில் மந்த கதியில் ஓவர்கள் வீசும் அணிகளுக்கு தண்டனை வழங்கும் விதமாக “சிவப்பு அட்டை” வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நடைமுறைக்கு அமைய பந்துவீசும் அணிகள் 85 நிமிடங்களுக்குள் போட்டியின் 20ஆவது ஓவரினை ஆரம்பிக்காது போயின், மைதான நடுவரின் அறிவிப்பை அடுத்து வீரர் ஒருவரினை மைதானத்தினை விட்டு வெளியேற்ற வேண்டும். இவ்வாறு வெளியேற்றப்படும் வீரர், பந்துவீசும் அணியின் தலைவரால் தெரிவு செய்யப்பட்டு பின்னர் மைதான நடுவரினால் சிவப்பு அட்டை வழங்கப்பட்டு வெளியேற்றப்படுவார். எனவே பந்துவீசும் அணியானது வீரர் ஒருவரினை இழக்கும் நிலை ஏற்படும். இதேநேரம் இதற்கு மேலதிகமாக பந்துவீசும் அணி போட்டியின் இறுதி ஓவரில் 2 களத்தடுப்பாளர்களை மாத்திரமே, 30 அடி சுற்றுவட்டத்திற்கு (30 Yard Circle) இற்கு வெளியேயும் நிறுத்த முடியும்.

எனவே கால்பந்து போட்டிகளை ஒத்தவிதத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விதிமுறைகளுக்கு அமைய, சென். நெவில் பேட்ரியட்ஸ் மற்றும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் இடையில் நடைபெற்ற CPL போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடியிருந்த சுழல்சகலதுறை வீரர் சுனில் நரைன், அணித்தலைவர் கீய்ரோன் பொலர்ட் மூலம் மைதான நடுவரின் வேண்டுகோளுக்கு அமைய சிவப்பு அட்டை வழங்கப்பட மைதானத்தினை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தார்.

>> ஆசியக் கிண்ணத் தொடரினை தவறவிடும் துஷ்மன்த சமீர

இதன் மூலம் சுனீல் நரைன் கிரிக்கெட் போட்டிகளில் சிவப்பு அட்டை வழங்கப்பட்டு வெளியேறிய முதல் வீரராக மாறுகின்றார்.

சுனீல் நரைன் மைதானத்தினை விட்டு வெளியேற்றப்பட்ட முன்னர் பந்துவீச்சில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<