மேற்கிந்தியத் தீவுகள்,அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா, ஆகிய மூன்று அணிகளும் பங்குபற்றும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் ஜூன் மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கிறது .
இத்தொடரில் பங்குபற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் குழாமில் 2015ஆம் ஆண்டு நவம்பருக்குப் பின்னர், சர்வதேசப் போட்டிகள் எவற்றிலும் விளையாடியிருக்காத சகலதுறை வீரர் கெரான் பொலார்ட் மற்றும் முக்கிய சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் ஆகிய இருவரும் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாமில், அண்மையில் இடம்பெற்ற இருபதுக்கு-20 உலகக்கிண்ண தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சம்பியனாக முக்கிய காரணமாக அமைந்த கார்லொஸ் பிறெத்வெய்ட், மார்லன் சாமுவேல்ஸ் ஆகியோரும் இக்குழாமில் இடம்பெற்றுள்ள போதிலும், டெரன் சமி, டுவைன் பிராவோ, கிறிஸ் கெயில், அன்றே ரஸல் ஆகியோருக்கு இக்குழாமில் இடம் கிடைத்திருக்கவில்லை.
அறிவிக்கப்பட்டுள்ள குழாம்: ஜேஸன் ஹோல்டர், சுலைமான் பென், கார்லொஸ் பிறெத்வெய்ட், டெரன் பிராவோ, ஜொனதன் கார்ட்டர், ஜோன்சன் சார்ள்ஸ், அன்ட்ரே பிளெற்சர், ஷனொன் கப்றியல், சுனில் நரைன், ஆஷ்லி நேர்ஸ், கெரான் பொலார்ட், டினேஷ் ராம்டின், மார்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர்.
அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்ஆபிரிக்கா அணிகள் பங்குகொள்ளும் முத்தரப்புக் கிரிக்கட் தொடர் போட்டிகள் பற்றிய அட்டவணை
ஜூன் 3 – தென் ஆபிரிக்கா எதிர் மேற்கிந்திய தீவுகள்
ஜூன் 5 – அவுஸ்திரேலியா எதிர்மேற்கிந்தியதீவுகள்
ஜூன் 7 – தென்ஆபிரிக்காஎதிர்அவுஸ்திரேலியா
ஜூன் 11 – தென்ஆபிரிக்காஎதிர்அவுஸ்திரேலியா
ஜூன் 13 – அவுஸ்திரேலியாஎதிர்மேற்கிந்தியதீவுகள்
ஜூன் 15 – அவுஸ்திரேலியாஎதிர்மேற்கிந்தியதீவுகள்
ஜூன் 19 – தென்ஆபிரிக்காஎதிர்அவுஸ்திரேலியா
ஜூன் 21 – அவுஸ்திரேலியாஎதிர்மேற்கிந்தியதீவுகள்
ஜூன் 24 – தென்ஆபிரிக்காஎதிர்மேற்கிந்தியதீவுகள்
ஜூன் 26 – இறுதிப் போட்டி
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்