புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமனம்

463

இலங்கையின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக, நாமல் ராஜபக்ஷ நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இலங்கையில் கடந்த வாரம் 9ஆவது பாராளுமன்ற பொதுத்தேர்தல் நிறைவுக்கு வந்ததனை அடுத்து இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று (12) கண்டியில் நடைபெற்றிருந்தது. 

கிறிஸ்டல் பெலஸை போராடி வென்றது புளூ ஈகல்ஸ்

இந்த நிகழ்வின் போதே ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற நாமல் ராஜபக்ஷ இலங்கையின் புதிய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமனம் பெற்றுக்கொண்டார். 

கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரியின் முன்னாள் மாணவரான நாமல் ராஜபக்ஷ, தனது பாடசாலைக் காலத்தில் இருந்தே ஒரு ரக்பி வீரராக செயற்பட்டவர் என்பதுடன் அந்த அணியின் பிரதான அணியினை தலைமை தாங்கியும் இருந்தார். 

பின்னர், கடந்த 2000ஆம் ஆண்டில் இலங்கை 16 வயதுக்குட்பட்ட ரக்பி அணியினை தலைமை தாங்கிய நாமல், இலங்கை 19 வயதுக்குட்பட்ட ரக்பி அணியினையும் வழிநடாத்தியிருக்கின்றார். 

தன் வாயால் அபராதத்திற்குள்ளாகிய ஸ்டுவர்ட் ப்ரோட்

பின்னர் இலங்கை கடற்படை ரக்பி அணியின் தலைவராக மாறிய நாமல் ராஜபக்ஷ, கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை தேசிய ரக்பி அணியின் தலைவராகவும் மாறியிருந்தார். இதுதவிர, ரக்பி பயிற்சியாளராகவும் செயற்பட்டிருக்கும் நாமல் ராஜபக்ஷ இலங்கையின் விளையாட்டுத்துறை அதிக ஆர்வம் கொண்ட ஒருவராக கடந்த நாட்களில் சமூக வலைதளங்களில் அறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ThePapare.com உம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது. 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க