பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம், நாலந்த கல்லூரி முன்னிலையில்

318
Tamil - Nalanda vs St. Sebastian's - Day 1

பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதிற்கு கீழ்பட்டோருக்கான சிங்கர்கிரிக்கட் சுற்றுத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நாலந்த கல்லூரிக்கும் புனித செபஸ்டியன் கல்லூரிக்குமிடையில் தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வென்ற புனித செபஸ்டியன் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. ஆரம்பம் முதலே அசத்திய நாலந்த கல்லூரி பந்துவீச்சாளர்கள் செபஸ்டியன் கல்லூரி அணியினரை திணறடித்தனர். நாலந்த அணியினரின் பந்து வீச்சில் தடுமாறிய புனித செபஸ்டியன் கல்லூரி மிகவும் மெதுவாகத் துடுப்பெடுத்தாடிய நிலையில் 87.5 ஓவர்களை எதிர்கொண்டு 172 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தனர்.

செபஸ்டியன் கல்லூரி சார்பாக துமித் வெல்லகே 31 ஓட்டங்களையும் ஜணுஷ்க பெரேரா 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். நாலந்த அணி சார்பாக சிறப்பாகப் பந்து வீசிய ஜயோத் கல்தீரா 25 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினார். தமிந்து கமலசூரிய மற்றும் ரவீன் டி சில்வா தலா 2 விக்கட்டுகள் வீதம் கைப்பற்றினர்.

3 ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நாலந்த அணியினர் ஆட்ட முடிவின் போது விக்கட் இழப்பின்றி 4 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி

முதல் இனிங்ஸ் – 172/10 (87.5)

துமித் வெல்லகே 31, ஜணுஷ்க பெரேரா 21

ஜயோத் கல்தீரா 3/25, தமிந்து கமலசூரிய 2/30, ரவீன் டி சில்வா 2/17

நாலந்த கல்லூரி

முதல் இனிங்ஸ் – 4/0 (3)