சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுத் தொடரில் 16 அணிகள் பங்கேற்கும் சுற்றின் மற்றுமொரு போட்டி மொறட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்கும், கொழும்பு நாலந்த கல்லூரிக்கும் இடையில் நடைபெற்றது.
விறுவிறுப்பான ஆட்டத்தில் தர்மராஜவிடம் தோல்வியடைந்த கிங்ஸ்வூட் கல்லூரி
பரபரப்பான நிலையில் நாடு பூராகவுமுள்ள பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்று…..
சீரற்ற காலநிலையால் இந்தப் போட்டி முழுமையாக நிறைவுறாத நிலையில், நாணய சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு அதில் வெற்றிபெற்ற மொறட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி, அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியது.
மொறட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்று(26) நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பிரின்ஸ் ஒப் வேல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அவ்வணியினர் 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
அவ்வணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த உதவித் தலைவர் அவிந்து பெர்னாண்டோ 75 ஓட்டங்களையும், சனோத் தர்ஷிக 67 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்து அணிக்கு வலுச்சேர்த்திருந்தனர்.
பந்துவீச்சில் நாலந்த கல்லூரி சார்பில் சமிந்து விஜேசிங்க மற்றும் சுஹங்க விஜேவர்தன ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து மழை குறுக்கிட்டதால் நாலந்த கல்லூரியின் இன்னிங்ஸை ஆரம்பிப்பதில் தடை ஏற்பட்டது. இது போட்டியின் முடிவில் அதிக தாக்கம் செலுத்தும் காரணியாகவும் மாறியது.
அரையிறுதிக்குள் நுழைந்த பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி
சகல துறையிலும் பிரகாசித்து ஆனந்த கல்லூரி வீரர்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்த……
எனவே நடுவர்கள் மற்றும் இரு கல்லூரிகளின் அணித் தலைவர்களின் சம்மதத்துடன் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு நாணய சுழற்சி முறைமையை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, நாணய சுழற்சியில் இரண்டாவது தடவையாகவும் பிரன்ஸ் ஓப் வேல்ஸ் கல்லூரி அணியின் தலைவர் சவிந்து பீரிஸ் வெற்றிகொள்ள, அவ்வணி காலிறுதிக்குத் தகுதிபெற்றது. இறுதியில் நாலந்த கல்லூரிக்கு ஏமாற்றத்துடன் போட்டித் தொடரிலிருந்து வெளியேறியது.
போட்டியின் சுருக்கம்
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி 282/10 (50) – அவிந்து பெர்னாண்டோ, சனோத் தர்ஷிக 67, சவிந்து பீரிஸ் 36, சுவத் மெண்டிஸ் 29, வினுஜ ரன்புல் 22, சமிந்து விஜேசிங்க 3/54, சுஹங்க விஜேவர்தன 3/54, லக்ஷித ரசன்ஜன 2/33
முடிவு – மொறட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி காலிறுதிக்குத் தகுதி