பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I) புதிய தலைவராக நஜ்முல் ஹொசைன் ஷன்டோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
>> ஆப்கான் தொடருக்கான இலங்கை T20I குழாம் அறிவிப்பு
முன்வரிசை துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான நஜ்முல் ஹொசைன் ஷன்டோ அடுத்த ஒரு வருடத்திற்கு மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்களாதேஷ் அணியினை வழிநடாத்தவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) தலைவர் நஷ்முல் ஹஸன் புதிய தலைவராக நஜ்முல் ஹொசைன் நியமிக்கப்பட்ட விடயம் தொடர்பில் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த சகீப் அல் ஹஸனிற்கு ஏற்பட்ட பார்வை கோளாறு ஒன்றின் காரணமாக அவர் தொடர்ந்தும் தலைவராக நீடிப்பதில் ஸ்திரமற்ற தன்மை நிலவி வரும் நிலையிலேயே நஜ்முல் ஹொசைனிற்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“நான் சகீப் உடன் பேசி விட்டேன். அவரது பார்வை கோளாறினால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவர் இலங்கை தொடரில் ஆடுவதிலும் சந்தேகம் நிலவுகின்றது. உலகக் கிண்ணமும் நெருங்கும் நிலையில் நாம் வாய்ப்பை தவற விட விரும்பவில்லை.” என நஷ்முல் ஹஸன் குறிப்பிட்டார்.
நஜ்முல் ஹொசைன் தலைமையிலான பங்களாதேஷ் அணி விளையாடும் முதல் தொடராக இலங்கை கிரிக்கெட் அணியின் பங்களாதேஷ் சுற்றுப் பயணம் அமைகின்றது. அடுத்த மாத ஆரம்பத்தில் நடைபெறும் குறிப்பிட்ட சுற்றுப்பயணத்தில் பங்களாதேஷ் அணியானது இலங்கையுடன் மூவகை கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<