இன்று ஒக்டோபர் 10ஆம் திகதி மியான்மரின் ரங்கூனில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான FIFA நட்புரீதியான போட்டியில் மியான்மார் 2க்கு 0 என வெற்றி பெற்றது.
இலங்கை அணி 4-3-3 என்ற அணி கட்டமைப்புடன் ஆட்டத்தை ஆரம்பித்தது, பயிற்சியாளர் அப்துல்லா அல்முதைரி சுஜன் பெரேராவை கோல் காப்பிலும், வேட் டெக்கர் மற்றும் ஆலிவர் கெலார்ட் முன்னிலையிலும் வைத்திருந்தார்.
ஆரம்பத்திலிருந்து மியன்மார் அணி சிறந்த ஆட்ட திறனை வெளிப்படுத்தியது. மியன்மாரின் முதலாவது கோலை அவ்வணிக்காக லூவின் மோ அடித்தார்.
இலங்கை ஒரு சில சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தியது, எனினும் கோல் எதனையும் அடிக்கவில்லை. முதலாம் பாதி நிறைவில் மியன்மார் 1 இற்கு 0 என முன்னிலை பெற்றது.
- நட்புரீதியான போட்டிக்கு தயாராகும் இலங்கை கால்பந்து அணி
- இரு சுழல் வீரர்களை விடுவித்துள்ள பாகிஸ்தான் டெஸ்ட் குழாம்
இலங்கை அணி இரண்டாம் பாதியை சிறப்பாக ஆரம்பித்து இருந்தாலும் அவர்கள் கோல் எதனையும் பெறத் தவறினர்.
53ஆவது நிமிடத்தில் மியன்மார் அணி தனது இரண்டாவது கோலை லெவின் இன் பிரீ கிக் கோல் மூலம் பெற்றது.
மேலும் இலங்கை அணி போட்டி முழுவதும் எந்த கோல்களும் அடிக்காததால் மியன்மார் அணி இப்போட்டியை 2 இற்கு 0 என வெற்றி பெற்றது.
முழு நேரம்: மியன்மார் 2-0 இலங்கை
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<