மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணி கரீபியன் தீவுகளுக்கு பயணமாகிவுள்ளது.
தனஞ்சயவுக்கு மாற்று வீரர் இன்றி மேற்கிந்திய தீவுகள் செல்லும் இலங்கை அணி
தனது தந்தை கொல்லப்பட்ட நிலையில் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இருந்து
அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இப்போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் 31 வயதான இடதுகை துடுப்பாட்ட வீரரான மஹேல உடவத்த, காயத்திற்கு உள்ளாகியிருக்கும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்னவுக்கு பிரதியீடாக டெஸ்ட் அணி குழாத்தில் முதற்தடவையாக உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.
இலங்கை அணிக்காக 2008ஆம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மஹேல உடவத்த அறிமுகமாயிருந்த போதிலும் டெஸ்ட் போட்டிகள் எதிலும் விளையாடியிருக்கவில்லை. எனவே, மஹேல உடவத்தவிற்கு இந்த சுற்றுப் பயணம் கன்னி டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.
இந்நிலையில், இவ்வருடத்தின் ஆரம்பத்தில் நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான முதல்தர போட்டிளின் ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகள் மற்றும் அண்மையில் நிறைவுக்கு வந்த மாகாணங்களுக்கிடையிலான நான்கு நாட்கள் கொண்ட போட்டியில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுள் முன்னிலை வீரராக மஹேல உடவத்த விளங்குகின்றார்.
அதிலும் குறிப்பாக, அண்மையில் நிறைவுக்கு வந்த மாகாண அணிகளுக்கு இடையிலான முதல் தர கிரிக்கெட் தொடரில் மஹேல உடவத்த 56.60 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் மொத்தமாக 283 ஓட்டங்களைக் குவித்திருந்ததோடு, தற்போது நடைபெற்று வரும் மாகாண அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரில் இரண்டு போட்டிகளில் மாத்திரம் விளையாடி 188 ஓட்டங்களை குவித்து தேசிய அணியில் மீண்டும் விளையாடுவதற்கான அறிகுறியை தேர்வாளர்கள் பக்கம் திசை திருப்பியிருந்தார்.
கனடா T20 லீக்கில் முன்னணி வீரராக மாலிங்க
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்த லசித் மாலிங்க, இலங்கை .
போதியளவு சர்வதேசப் போட்டிகளில் மஹேல உடவத்த விளையாடாவிட்டாலும், உள்ளூர் முதல் தர போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை வைத்து அவரை திமுத் கருணாரத்னவின் இடத்திற்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தமை இலங்கை கிரிக்கெட் எதிர்காலத்திற்கு சிறந்த முதலீடாக அமையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
எனவே, சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இலங்கை அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தமை தொடர்பில் ‘அத‘ சிங்கள நாளிதழுக்கு மஹேல உடவத்த வழங்கிய விசேட நேர்காணலை இங்கு பார்ப்போம்.
கேள்வி – அண்மையில் நிறைவுக்கு வந்த மாகாணங்களுக்கிடையிலான முதல்தரப் போட்டிகளில் வெளிப்படுத்திய உங்களது திறமையைப் பற்றிச் சொல்லுங்கள்?
பதில் – இம்முறை மாகாணங்களுக்கிடையிலான முதல்தரப் போட்டிகள் மிகவும் போட்டித் தன்மை கொண்டதாக அமைந்தன. அதன் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே நான் 97 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டேன். இதனையடுத்து நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் என்னால் சிறப்பாக விளையாடி ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிட்டியது.
Sammu Ashan’s crucial half-century
20-year old Galle batsman Sammu Ashan stroked a crucial knock of 51 in 67 balls with 6 fours and 1 six Kandy in their SLC Super Provincial Limited Overs
கேள்வி – காலத்துக்கு காலம் தேசிய அணிக்குள் வந்து போகின்ற வீரராக உங்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது. எனவே, உங்களுக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை எவ்வாறு தக்கவைத்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளீர்கள்?
பதில் – உண்மையில் டெஸ்ட் அணியில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தான் நான் இவ்வளவு காலமும் கிரிக்கெட் விளையாடி வந்தேன். கடந்த மூன்று, நான்கு வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக ஓட்டங்களைக் குவித்து முன்னிலை பெற்ற வீரனாகவும் இடம்பிடித்தேன். எனவே, எனக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அணிக்காக சிறப்பாக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.
கேள்வி – நீங்கள் தேசிய அணிக்காக விளையாடிய போது அதிரடி ஆட்டக்காரராகவே விளையாடி இருந்தீர்கள். அதன் காரணமாகவே உங்களை ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு மாத்திரம் தேர்வு செய்திருந்தார்கள். இது உங்களுக்கு நடந்த மிகப் பெரிய அசாதாரணம் என்று நினைக்கவில்லையா?
பதில் – நான் அவ்வாறு எதனையும் நம்ப மாட்டேன். அதிலும் குறிப்பாக, ஒரு தரப்பினர் என்னை ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு மாத்திரம் பொறுத்தமானவன் என கூறியிருந்தார்கள். ஆனால், அதை நாம் அவ்வளவு பெரிதாக நம்பவில்லை. நான் உள்ளூர் கழக மட்டத்தில் மூன்று நாட்கள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட போட்டிகளில் விளையாடி எனது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறேன். எனவே, எனக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாக விளையாடுவதே எனது எதிர்பார்ப்பாகும்.
டி வில்லியர்ஸ் நான் பார்த்த வீரர்களில் சிறந்த ஒருவர் – மஹேல ஜயவர்தன
கிரிக்கெட் உலகின் முக்கிய வீரர்களான அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் /p>
கேள்வி – தொடர்ந்து தேசிய அணியில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தால் எந்த இடத்தில் களமிறங்குவதற்கு எதிர்பார்த்துள்ளீர்கள்?
பதில் – ஆரம்ப காலங்களில் நான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவே களமிறங்கியிருந்தேன். ஆனால் கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக 03ஆம், 04ஆம் இலக்கங்களில் விளையாடி வருகிறேன். எனவே, எனக்கு கிடைக்கின்ற இடத்தைப் பற்றி எந்தவொரு பிரச்சினையும் இல்லை. உண்மையில் அணியில் விளையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் எந்தவொரு இடத்திலும் களமிறங்குவதற்கு தயாராக உள்ளேன்.
கேள்வி – உங்களுடைய கழக மட்ட வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள்?
பதில் – நான் இவ்வருடம் முதல் என்.சி.சி அணிக்காக விளையாடி வருகின்றேன். அதில் நாம் இவ்வருடத்துக்கான டி-20 சம்பியனாகத் தெரிவாகியிருந்தோம். ஒரு நாள் போட்டிளிலும் நாம் சிறப்பாக விளையாடியிருந்தோம். எனவே, கடந்த மூன்று, நான்கு வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் ஒரு சிறந்த வீரராகவும் இடம்பெற முடிந்தது.
கேள்வி – இறுதியாக, இதுவரை காலமும் உங்களது கிரிக்கெட் வாழ்க்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல உதவி செய்தவர்கள் பற்றிச் சொல்லுங்கள்?
பதில் – உண்மையில் எனது பெற்றோரை முதலில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அதேபோல எனது மனைவி, அவரது பெற்றோர், எனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் பல்வேறு முறையில் எனக்கு உதவிய நலன் விரும்பிகள் உள்ளிட்ட அனைவரையும் இந்த நேரத்தில் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க