முன்னாள் கிரிக்கெட் வீரர்களை ஒருங்கிணைக்கும் முகமாக நடைபெற்று வரும் “எனது தந்தையே, எனது நாயகன் (My Dad, My Superstar)“ கிரிக்கெட் தொடரின் கடந்த 30ம் திகதிக்கான போட்டிகளில் இசிபத்தன, புனித பேதுரு, புனித அன்னம்மாள் (St. Anne’s), புனித செபஸ்தியன் ஒன்றிணைந்த கல்லூரி மற்றும் காலி மஹிந்த கல்லூரி அணிகள் வெற்றிகளை பெற்றுக்கொண்டன.
எனது தந்தையே எனது நாயகன்; முன்னாள் வீரர்களுக்கான கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம்
முன்னாள் கிரிக்கெட் வீரர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியோடு…..
புனித ஜோசப் எதிர் இசிபத்தன கல்லூரி
புனித ஜோசப் கல்லூரி அணிக்கு எதிரான போட்டியில் இசிபத்தன கல்லூரி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. புனித ஜோசப் கல்லூரி நிர்ணயித்த 122 என்ற வெற்றியிலக்கை, இசிபத்தன கல்லூரி 14.3 ஓவர்களில் அடைந்தது.
போட்டி சுருக்கம்
புனித ஜோசப் கல்லூரி – 121/8 (15)
இசிபத்தன கல்லூரி – 122/8 (14.3)
ஆட்டநாயகன் – நுவான் ஷொய்சா (43 ஓட்டங்கள், ஒரு விக்கெட்)
புனித பேதுரு கல்லூரி எதிர் நாலந்த கல்லூரி
நாலந்த கல்லூரி அணிக்கு எதிரான போட்டியில், சுமன் ஜயதிலக்கவின் சகலதுறை வெளிப்படுத்தலின் ஊடாக புனித பேதுரு கல்லூரி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
நாலந்த கல்லூரி – 106/8 (15)
புனித பேதுரு கல்லூரி – 107/8 (14.1)
ஆட்டநாயகன் – சுமன் ஜயதிலக்க (28 ஓட்டங்கள், 2 விக்கெட்டுகள்)
Photos : My Dad’s Cricket Tournament 2019 | Day 04 | QF | Colts Ground
ThePapare.com | Hiran Chandika | 01/04/2019 Editing and re-using…..
ஆனந்த கல்லூரி எதிர் புனித அன்னம்மாள் கல்லூரி
கொழும்பு ஆனந்த கல்லூரி அணி நிர்ணயித்திருந்த 141 என்ற வெற்றியிலக்கினை நோக்கிய புனித அன்னம்மாள் கல்லூரி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ஆனந்த கல்லூரி – 140/10 (15)
புனித அன்னம்மாள் கல்லூரி – 141/2 (14.3)
ஆட்டநாயகன் – ரொஷான் ஜெய்மன் (30 ஓட்டங்கள், ஒரு விக்கெட்)
புனித செபஸ்தியன் கல்லூரி எதிர் ரிச்மண்ட் கல்லூரி
புனித செபஸ்தியன் கல்லூரி அணியின் அபார துடுப்பாட்டத்தினை கட்டுப்படுத்த முடியாத ரிச்மண்ட் கல்லூரி 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
புனித செபஸ்தியன் கல்லூரி – 194/8 (15)
ரிச்மண்ட் கல்லூரி – 120/5 (15)
ஆட்டநாயகன் – தினூஷ (67 ஓட்டங்கள்)
மலியதேவ கல்லூரி எதிர் ஒன்றிணைந்த கல்லூரிகள் அணி
மலியதேவ கல்லூரிக்கு எதிரான போட்டியில் ஒன்றிணைந்த கல்லூரிகள் அணி (Combined) அபார பந்து வீச்சின் மூலமாக 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஒன்றிணைந்த கல்லூரிகள் அணி – 141/6 (15)
மலியதேவ கல்லூரி – 71/10 (15)
ஆட்டநாயகன் – பசன் வனசிங்க (38 ஓட்டங்கள், 2 விக்கெட்டுகள்)
டி எஸ் சேனநாயக்கா கல்லூரி எதிர் காலி மஹிந்த கல்லூரி
கொழும்பு டி எஸ் சேனநாயக்க கல்லூரி அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியில் மிரட்டிய காலி மஹிந்த கல்லூரி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டி எஸ் சேனநாயக்கா – 127/4 (15)
காலி மஹிந்த கல்லூரி – 128/2 (9.2)
ஆட்டநாயகன் – தரிந்து ரந்திம (38 ஓட்டங்கள்)
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<