இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இந்த வருடத்திற்கான ஹோல் ஒப் பேம் உறுப்புரிமைக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் முதல் வீரராக இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவருடன் அவுஸ்திரேலிய பெண்கள் அணியின் முன்னாள் தலைவர் கரேன் ரோல்டன், அவுஸ்திரேலியாவின் அர்த்துர் மொரிஸ் மற்றும் இங்கிலாந்து அணியின் ஜோர்ஜ் லோமன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
உலகத்தில் உள்ள சிறப்புமிக்க கிரிக்கெட் வீரர்களுக்கான ஒரு பாரிய அந்தஸ்தாக இந்த ஹோல் ஒப் பேம் உறுப்புரிமை கருதப்படுகிறது.
முரளிதரன் இலங்கை அணிக்காக பல சாதனைகளை நிலை நாட்டியுள்ளார்.
800 டெஸ்ட் விக்கட்டுகள், 534 ஒருநாள் விக்கட்டுகள், 13 டி20 விக்கட்டுகளை இவர் கைப்பற்றியுள்ளார்.
இதேவேளை டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கட்டுகளை 22 முறை கைப்பற்றியுள்ளதோடு, 67 முறை 5 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு உலகின் முதல்நிலை டெஸ்ட் அணிக்கு வழங்கப்படும் விசேட கோலை வழங்கும் நிகழ்வு, தனிப்பட்ட நிகழ்வாக இடம்பெற்றமைக்கு, இலங்கை கிரிக்கெட் சபையின் கோரிக்கையே காரணம் எனத் தெரியவருகிறது.
வழக்கமாக இந்த நிகழ்வு, பகிரங்கமாக இடம்பெறும் ஒன்றாகும். முதலிடத்துக்கான கோலைப் பெற்றுக் கொள்ளும் அணிகள், மிகப்பெரிய கௌரவமாக இந்நிகழ்வைக் கருதும். ஊடகங்களும் அதைப் பெரியளவில் முக்கியத்துவம் வழங்கி அறிக்கையிடும்.
ஆனால் இம்முறை, ஹொட்டலொன்றில், மூடிய நிகழ்வாகவே இது இடம்பெற்றது. பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், இலங்கை வீரர்களின் மனோதிடத்துக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால், இந்நிகழ்வை முக்கியத்துவமற்ற நிகழ்வாக மாற்றுமாறு, இலங்கை கிரிக்கெட் சபை கோரியிருந்ததாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்