வரலாற்று கதாநாயகர்கள் பட்டியலில் முரளிதரன்

1870
Muttiah Muralitharan

சுழல் பந்து ஜாம்பவான்களில் ஒருவரான முத்தையா முரளிதரன், ஐ.சி.சி இன் வரலாற்று கதாநாயகர்கள் பட்டியலில் இலங்கை சார்பான முதல் வீரராக இடம்பிடித்துள்ளார். அதற்காக எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஆரம்பமாகவிருக்கும் சம்பியன்ஸ் கிண்ணத்தின்போது, அவர் உத்தியோகபூர்வமாக கெளரவிக்கப்படவுள்ளார்.   

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த இலங்கை கிரிக்கெட் அணியினர்

இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஸ்லி டி சில்வா முரளி பெறப்போகும் இந்த கௌரவம் பற்றி கருத்து தெரிவிக்கையில்,

இவ்வாறானதொரு நிகழ்வு மூலம் முரளி கெளரவிக்கப்பட்டு, இலங்கை நாட்டின் கிரிக்கெட்டிற்கு இப்படியொரு கெளரவித்தினை பெற்றுத்தருவது எமக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியையும், பெருமையையும் பெற்றுத் தருகின்றது. அனைவரினாலும் விரும்பி ரசிக்கப்பட்ட அவரது கிரிக்கெட் வாழ்க்கை சாதனையாளர்களின் பட்டியலில் சேர்க்கப்பட மிகவும் தகுதியானதுதான் என்றார்.

இலங்கை கிரிக்கெட்டின் பிரதான நிறைவேற்று அதிகாரியின் கருத்துக்களில் இருந்து மேலும் தெரியவருவதாவது, பங்களாதேஷ் அணியுடனான தொடர் அல்லது இந்திய அணியுடனான தொடர் அல்லது சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் ஆகியவற்றில் ஒன்றில் முரளியின் கெளரவிப்பு வைபத்தினை நடாத்த வாய்ப்பு வழக்கப்பட்டிருந்தது. எனினும், முரளி இங்கிலாந்து மற்றும் வேல்சில் ஆரம்பமாகும் சம்பியன்ஸ் கிண்ணத்தினையே தனது கெளரவிப்பு நிகழ்விற்காக தேர்வு செய்திருந்தார்.

இத்தொடரில், இலங்கை அணிக்கு இரண்டாவது ஆட்டமாக ஓவல் மைதானத்தில் இந்தியாவுடன் நடைபெறவுள்ள போட்டியிலேயே முரளி கெளரவிக்கப்படவுள்ளார் என மேலும் அறியவருகின்றது.

இந்த நிகழ்வின்போது முரளி உட்பட அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவி கரேன் ரொல்டன், டொன் பிரட்மனின்இன்வின்சிப்பல்ஸ்என்னும் உலகின் அதிசிறந்த கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற ஆர்த்தர் மொர்ரிஸ் மற்றும் வெறும் 16 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி 100 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந் 19ஆம் நூற்றானண்டின் பந்து வீச்சாளர் ஜோர்ஜ்  லொஹ்மன் ஆகியோரும் கௌரவிக்கப்பட உள்ளனர்.

நடைபெறவுள்ள நிகழ்வில் இவர்கள் அனைவருக்கும், கிரிக்கெட்டில் நீண்ட காலம் காட்டிய சிறப்பாட்டத்திற்காக விஷேட நினைவுச்சின்னம் கொண்ட தொப்பிகள் வழங்கப்படவுள்ளன. லோஹ்மன் மற்றும் மொர்ரிஸ் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்காத காரணத்தினால் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொள்வர்.

சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் யார்?

இந்நிகழ்வு மூலம் கெளரவிக்கப்படும் நான்கு வீரர்களையும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் பாராட்டினார். மேலும் அவர்கள் குறித்து கருத்து தெரிவித்த டேவிட்,

கிரிக்கெட்டில் நீண்ட காலத்திற்கு அபார திறமையினை வெளிக்காட்டிய வீரர்களை தேர்வு செய்து .சி.சி. இன் வரலாற்று கதாநாயகர்கள் நிகழ்ச்சி திட்டம் மூலம் பாராட்டி கெளரவிக்கின்றோம். இம்முறை தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்த வீரர்கள் அந்த சாதனை நாயகர்கள் பட்டியலில் இடம்பிடிக்க மிகவும் தகுதியானவர்கள். அதில் குறிப்பாக முரளிதரன், இருக்கும் வீரர்களில் தற்போதைய காலத்திற்குரிய சரித்திர வீரர். அவரின் அதி சிறந்த ஆட்டம் நீண்ட காலத்திற்கு ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கையை சவால் மிக்க அணிகளில் ஒன்றாக வளர்ச்சியடையச் செய்ய அதிகம் உதவியிருந்தது.“ என்றார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வரை சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருந்த முரளி, தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் போது, டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுக்களையும், ஒரு நாள் போட்டிகளில் 534 விக்கெட்டுக்களையும், சர்வதேச T-20 போட்டிகளில் 12 விக்கெட்டுக்களையும் பெற்றிருந்தார்.  

1993 ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை அணி ஒரு நாள் போட்டிகளில் பெற்ற பல வெற்றிகளுக்கு முரளி  காரணமாக இருந்ததோடு, 1996ஆம் ஆண்டு இலங்கை வென்ற உலகக் கிண்ணத்திலும், 2002ஆம் ஆண்டு இந்திய அணியுடன் பகிர்ந்து கொண்ட சம்பியன்ஸ் கிண்ணத்திலும் இலங்கை அணியின் அங்கத்தவராக முரளி காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க