இலங்கை அணியின் சுழல் ஜாம்பவனாகிய முத்தையா முரளிதரன் டெஸ்ட், ஒரு நாள், T20I என சர்வதேசப் போட்டிகள் அனைத்திலும் மொத்தமாக 1,347 விக்கெட்டுக்களை கைப்பற்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
“T20I தொடரில் பிரகாசிக்கும் வீரர்களுக்கு உலகக்கிண்ணத்தில் வாய்ப்பு” – கிப்சன்
இலங்கை அணிக்கு எதிராக இன்று…
கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்றிருக்கும் முரளிதரன், உலகின் பிரபல்யமிக்க கிரிக்கெட் அணிகளுக்கு ஆலோசகராக தற்போது இருந்து வரும் நிலையில், அறப் பணிகளுக்கும் தன்னால் முடியுமான பங்களிப்பினை வழங்கி வருகின்றார்.
இதன் ஒரு அங்கமாக முரளிதரன் தனது 19 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் பெற்றுக் கொண்ட ஆட்ட நாயகன் விருதுகள் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் அனைத்தையும் நற்குண முன்னேற்ற அமைப்பின் (Foundation of Goodness) நூதனசாலைக்கு அன்பளிப்புச் செய்திருக்கின்றார்.
நற்குண முன்னேற்ற அமைப்பானது இலங்கையில் பொதுநலச் சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கின்ற ஒரு தொண்டு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தோடு முரளிதரன் நீண்டகாலமாக இணைந்து நலன்புரி சேவைகளை செய்து வருகின்றார். இந்த அமைப்புடன் இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்த்தன போன்றோரும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நற்குண முன்னேற்ற அமைப்பின் நம்பிக்கையாளர்களில் ஒருவராக செயற்படும் முரளி, தனது ஆட்ட நாயகன் விருதுகள் மற்றும் வெற்றிக்கிண்ணங்கள் போன்றவற்றை அறப்பணி சேவைகளுக்காக வழங்கியதை முரளிதரனின் முகாமையாளரான குஷில் குணசேகர பாகிஸ்தான் செய்தி இணையதளம் ஒன்றுக்கு உறுதிப்படுத்தியிருந்தார்.
“முரளியின் பெயரிலான நூதனசாலை சீனிகமையில் அமைந்துள்ள நற்குண முன்னேற்ற அமைப்பின் விளையாட்டு அகடமி கட்டடத்தில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக முரளி தனது அனைத்து வெற்றிக்கிண்ணங்களையும் அன்பளிப்புச் செய்திருக்கின்றார். பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள இந்த நினைவுச் சின்னங்களால் நற்குண முன்னேற்ற அமைப்பின் மீதும், அதன் நலன்புரி வேலைகள் மீதும் அதிக ஈர்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது“
முத்தையா முரளிதரன் நலத்திட்டம் ஒன்றுக்காக புதிதாக ஆரம்பிக்கப்படவிருக்கும் இந்த நூதனசாலைக்கு இலங்கையின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோரது ஆட்ட நாயகன் விருதுகள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களையும் அன்பளிப்புச் செய்ய அழைப்பு விடுத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியை எதிர்கொள்ளும் தென்னாபிரிக்க டி20 குழாம் அறிவிப்பு
இலங்கை அணியுடன் டி20 தொடரில்…
முரளியின் விருதுகள் அடங்கிய இந்த நூதனசாலையினை பொது மக்கள் அனைவரும் இலவசமாக பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதோடு பொது மக்களுக்கு இந்த நூதனசாலையினை பார்வையிடுவதன் மூலம் நல்ல காரியம் ஒன்றுக்கு உதவுவதற்கான வாய்ப்பு ஒன்றும் பெற்றுக்கொடுக்கப்படவிருக்கின்றது.
“பெறுமதிமிக்க நோக்கம் ஒன்றுக்காக இந்த நூதனசாலையில் தனது சகாக்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரது விருதுகளை காட்சிப்படுத்தவும் முரளி அழைப்பு விடுத்திருக்கின்றார். இந்த நூதனசாலையினை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட முடியும் என்பதோடு, பார்வையிட்ட பின்னர் நன்கொடைகள் வழங்குவதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன“
முத்தையா முரளிதரன் இலங்கை அணிக்காக இதுவரையில் 133 டெஸ்ட் போட்டிகளிலும், 350 ஒருநாள் போட்டிகளிலும், 12 T20I போட்டிகளிலும் விளையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<