மே.தீவுகள் தொடருக்கான பங்களாதேஷ் குழாம்கள் அறிவிப்பு

Bangladesh tour of West Indies 2022

268

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான பங்களாதேஷ் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் குழாத்தில் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முஷ்தபிசூர் ரஹ்மான், மீண்டும் டெஸ்ட் குழாத்துக்குள் இணைக்கப்பட்டுள்ளார். இறுதியாக இவர் கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்தார்.

>> சர்ரே அணியை பந்துவீச்சில் மிரட்டிய துனித் வெல்லாலகே

அதேநேரம், அணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த முஷ்பிகூர் ரஹீம் மூன்று குழாம்களிலும் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதுடன், உபாதைக்குள்ளான நயீம் ஹஸன் மே.தீவுகள் செல்லும் வாய்ப்பை பெறவில்லை. எவ்வாறாயினும், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் உபாதைக்குள்ளாகிய சொரிபுல் இஸ்லாம், மூன்று குழாம்களிலும் இடம்பிடித்துள்ளார்.

அனாமுல் ஹக் 2019ம் ஆண்டுக்கு பின்னர் ஒருநாள் மற்றும் T20I குழாம்களில் இணைக்கப்பட்டுள்ளதுடன், மொஹமட் சய்புதீன் T20 உலகக்கிண்ணத்தின் பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவர்களுடன் டஸ்கின் அஹமட் மற்றும் மொஹமட் நயீம் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், மஹ்முதுல் ஹசன் ஜோய் மற்றும் கலீட் அஹ்மட் ஆகியோர் ஒருநாள் மற்றும் T20I  குழாம்களின் வாய்ப்பை இழந்துள்ளனர்.

பங்களாதேஷ் அணியின் டெஸ்ட் தொடருக்கான தலைவராக மொமினுல் ஹக் செயற்படவுள்ளதுடன், ஒருநாள் போட்டிகளுக்கான தலைவராக தமிம் இக்பால் மற்றும் T20I தொடருக்கான தலைவராக மஹ்துல்லாஹ் ஆகியோர் செயற்படவுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் தொடருக்காக மூன்று கட்டங்களாக எதிர்வரும் ஜூன் 3, 5 மற்றும் 6ம் திகதிகளில் புறப்படவுள்ள பங்களாதேஷ் அணி, 16ம் திகதி முதல் டெஸ்டில் விளையாடவுள்ளதுடன், அடுத்ததாக T20I மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளமை குறிப்பித்தக்கது.

பங்களாதேஷ் டெஸ்ட் குழாம்

மொமினுல் ஹக் (தலைவர்), தமிம் இக்பால், மஹ்முதுல் ஹஸன் ஜோய், நஜ்முல் ஹுசைன் செண்டோ, சகீப் அல் ஹசன், லிடன் டாஸ், மொஸ்டாக் ஹுசைன், யசீர் அலி, தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹஸன், எப்டொட் ஹுசைன், கலீட் அஹ்மட், ரெஜார் ரஹ்மான் ராஜா, சொரிபுல் இஸ்லாம், முஷ்தபிசூர் ரஹ்மான், நூருல் ஹாஸன் சொஹான்

பங்களாதேஷ் ஒருநாள் குழாம்

தமிம் இக்பால் (தலைவர்), லிடன் டாஸ், நஜ்முல் ஹுசைன் செண்டோ, சகீப் அல் ஹசன், யசீர் அலி, மஹ்மதுல்லாஹ், அபிப் ஹொஸைன், மொஸ்டாக் ஹுசைன், நூருல் ஹாஸன் சொஹான், மெஹிதி ஹாஸன், டஸ்கின் அஹ்மட், சொரிபுல் இஸ்லாம், முஷ்தபிசூர் ரஹ்மான், எப்டொட் ஹுஸைன், நசும் அஹ்மட், மொஹமட் சய்புதீன், அனாமுல் ஹக் பிஜோய்

பங்களாதேஷ் T20I குழாம்

மஹ்முதுல்லாஹ் (தலைவர்), முனிம் சஹ்ரியர், லிடன் டாஸ், அனாமுல் ஹக் பிஜோய், சகீப் அல் ஹசன், அபிப் ஹொஸைன், மொஸ்டாக் ஹுசைன், நூருல் ஹாஸன் சொஹான், யசீர் அலி, மெஹிதி ஹாஸன், முஷ்தபிசூர் ரஹ்மான், சொரிபுல் இஸ்லாம்,  சொஹ்துல் இஸ்லாம், நசும் அஹமட், மொஹமட் சய்புதீன்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<