டெஸ்ட் குழாத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஷ்பிகூர் ரஹீம்!

Sri Lanka tour of Bangladesh 2024

221

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான குழாத்திலிருந்து பங்களாதேஷ் வீரர் முஷ்பிகூர் ரஹீம் நீக்கப்பட்டுள்ளார். 

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமாகவுள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்ட வனிந்து ஹஸரங்கவிற்கு போட்டித்தடை

குறித்த இந்த டெஸ்ட் தொடருக்கான குழாத்தில் அனுபவ விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் முஷ்பிகூர் ரஹீம் இணைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள காரணத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வலதுகை பெருவிரலில் இவருக்கு உபாதை ஏற்பட்டிருந்தது. குறித்த விரலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து இவர் டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 

முஷ்பிகூர் ரஹீம் டெஸ்ட் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக மாற்று வீரரை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இதுவரை இணைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<