பங்களாதேஷ் அணியின் கடந்த கால வெற்றிகளின் நம்பிக்கையுடன் T20 உலகக்கிண்ணத்தில் விளையாடுவதற்கு எதிர்பார்ப்புடன் இருப்பதாக பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் முஷ்பிகூர் ரஹீம் தெரிவித்துள்ளார்.
ஐசிசி T20 உலகக்கிண்ணத்தின் சுப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறுவதற்கு முன்னர், முதல் சுற்றில் விளையாடவுள்ளது. முதல் சுற்றுப்போட்டிகள் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
>> பாக்.கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி வசீம் கான் இராஜினாமா
குறித்த தொடரில் விளையாடவுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட முஷ்பிகூர் ரஹீம்,
“நாம் கடைசி மூன்று T20I தொடர்களை வெற்றிக்கொண்டுள்ளோம். இதில், ஒரு தொடரை வெளிநாட்டிலும், ஏனைய இரண்டு தொடர்களை சொந்த மண்ணிலும் விளையாடவுள்ளோம். T20 உலகக்கிண்ண தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர், இதுவொரு சிறந்த உத்வேகமாகும். T20I போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிக்கொள்வது இலகுவான விடயமல்ல. எனவே, மிகவும் எதிர்பார்ப்புடன், T20 உலகக்கிண்ணத்துக்காக காத்திருக்கிறேன்” என்றார்.
அதேநேரம், எத்தனை தடவைகள் T20 உலகக்கிண்ணத்தில் விளையாடியிருந்தாலும், நாம் வெற்றிகரமான அணியாக இருக்கும் போது, கிடைத்துள்ள இந்த வாய்ப்பு மிகவும் அற்புதமானதாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
முஷ்பிகூர் ரஹீம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை என்பதுடன், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20I தொடரிலும் அணியுடன் இருக்கவில்லை. எனினும், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்தாலும், 39 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டிருந்தார். எனவே, அவருடைய பிரகாசிப்பு தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
“நான் தனிநபராக மற்றும் அணியுடன் இணைந்து எந்தளவு பயிற்சிகளை மேற்கொண்டாலும், போட்டிகளில் விளையாடுவது போன்று இருக்காது. உயர் செயற்திறன் அணியில் உள்ள சிறந்த வீரர்களுடன் விளையாடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். எனக்கு அழுத்தம் இருந்தாலும், நான் ஒரு வாய்ப்பினை எதிர்பார்த்திருந்தேன்.
குறித்த வாய்ப்பினை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை எனக்கு கொடுத்திருந்தது. இரண்டு போட்டிகளில் நான் விளையாடியிருந்தேன். அதேநேரம், குறித்த போட்டிகள் எனக்கு சிறந்த தருணமாக அமைந்திருந்தது. எனவே, T20 உலகக்கிண்ணத்தை நோக்கி காத்திருக்கிறேன்” என்றார்.
பங்களாதேஷ் அணி, T20 உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றுப்போட்டிகளுக்கு முன்னர், இலங்கை அணியுடன் பயிற்சிப்போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<