மியூசியஸ் – கேட்வே கல்லூரிகளுக்கு இடையில் முதற்தடவையாக மாபெரும் வலைப்பந்து போட்டி

197

மியூசியஸ் கல்லூரியும், கேட்வே கல்லூரியும் முதல் தடவையாக தமக்கிடையே மாபெரும் வலைப்பந்து போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கின்றன. முதல் தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த வலைப்பந்து போட்டி பாடசாலை வலைப்பந்து வரலாற்றில் புதிய அத்தியாயங்களில் ஒன்றாக அமைகின்றது.

இந்த வலைப்பந்து போட்டியில் இரண்டு பாடசாலை அணிகளும் “மேரி மியூசியஸ் – ரோஹினி எல்லேஸ்“ சவால் கிண்ணத்திற்காக பலப்பரீட்சை நடாத்துகின்றன. இப்போட்டியின் மூலம், இலங்கையின் பழமைவாய்ந்த தனியார் பாடசாலை ஒன்றினதும், இலங்கையின் பிரபல்யமான சர்வதேச பாடசாலை ஒன்றினதும் வீராங்கனைகளின் திறமைகளை வெளிப்படுத்துவது எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கூடைப்பந்து தொடரின் சம்பியனாக யாழ். வேம்படி மகளிர்

இந்த போட்டிக்கு சிரேஷ்ட விருந்தினராக இலங்கையின் வலைப்பந்து சம்மேளன தலைவி விக்டோரியா லக்ஷ்மி அழைக்கப்படவுள்ளார். இந்த பெரும் போட்டியில் இரண்டு பாடசாலைகளினதும் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. இதேவேளை, குறித்த பெரும் போட்டி நடைபெறும் நாளில் மியூசியஸ் கல்லூரிக்கும், விசாகா வித்தியாலயத்திற்கும் இடையிலான கண்காட்சி போட்டியொன்றும், மியூசியஸ் கல்லூரியினதும், கேட்வே கல்லூரியினதும் 15 வயதுக்கு கீழ்ப்பட்ட அணிகள் பங்குபெறும் போட்டியும் நடைபெறவுள்ளது.

இந்த பெரும் போட்டி பற்றி கருத்து தெரிவித்திருந்த Dr. ஹர்ஷ அல்லேஸ் அரசாங்க பொது பாடசாலை ஒன்றை தனியார் பாடசாலை ஒன்று வலைப்பந்து பெரும் போட்டி ஒன்றில் சந்திப்பது, இந்த நாட்டில் இதுவே முதல் தடவையாகும். நான் இது வெற்றிகரமானதொன்றாக மாறும் என நினைக்கிறேன்“ எனக் கூறியிருந்தார்.

மேலும் அவர் பேசுகையில், “கிரிக்கெட்டும், ரக்பியுமே பெரும் போட்டிக்கான உணர்வுகளை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கின்றன. இதே மாதிரியான பெரும் போட்டிகள் இன்னும் வேறு விளையாட்டுக்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டால் குறிப்பாக பெண்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கின்றேன். சிறுவர்கள் இந்த மாதிரியான நிகழ்வுகளுக்கு வரும் போது  அவர்களுக்கும் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டு அதில் பங்கெடுத்துக் கொள்வர். இப்படியான (வேறு விளையாட்டுக்களின்) பெரும் போட்டிகள் வெற்றியளிக்கும் என்பதற்கு றோயல் கல்லூரிக்கும் கேட்வே கல்லூரிக்கும் இடையிலான கூடைப்பந்து போட்டிகள் சான்று“ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வலைப்பந்து பெரும் போட்டி இந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி றோயல் கல்லூரியின் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை மியூசியஸ் கல்லூரியின் வலைப்பந்து சம்மேளனமும், கேட்வே கல்லூரியின் வலைப்பந்து சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. ஒழுங்கமைப்பாளர்கள்  இந்த பெரும் போட்டி ஆடுகளத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வலைப்பந்து விளையாட்டுக்கான பாரம்பரியத்தை உருவாக்கும் என உறுதியாக நம்புகின்றனர்.

இந்த பெரும் போட்டி பற்றி பேசியிருந்த மியூசியஸ் கல்லூரியின் அதிபர் நெலும் சேனாதீர, “நாங்கள் (போட்டிக்கான) தயார்படுத்தல்களில் மும்முராக இருக்கின்றோம். வருகின்ற காலங்களிலும், தற்போதும் நடைபெறும் இந்த பெரும் போட்டி நினைவுக்குரிய ஒன்றாக மாறும்“ என கூறியிருந்தார்.

விஜயபாகு மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் சிறந்த வீரராக இஷான் தெரிவு

இந்தப் பெரும் போட்டிக்கான கிண்ணத்தில் நினைவுகூறப்படும் பெண்களில் ஒருவரான மேரி மியூசியஸ் ஹிக்கின்ஸ் ஜேர்மனியைச் சேர்ந்த ஒரு கல்வியாளர் ஆவார். மியூசியஸ் கல்லூரியின் ஸ்தாபகரான இவர் சிங்கள பாரம்பரியத்தையும், பெளத்த மதத்தையும் அடிப்படையாக கொண்ட பல  பதிப்புக்களுக்கு சொந்தக்காரராக இருக்கின்றார். இவரால் 1924 ஆம் ஆண்டு எழுதப்பட்ட “போயா நாட்கள்” என்னும் புத்தகம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

மறுமுனையில், இந்த பெரும் போட்டிக்கான கிண்ணத்தில் நினைவுகூறப்படும் ஏனைய மங்கையான ரோஹினி அல்லேஸ் கொழும்பு றோயல் கல்லூரியின் முன்னாள் ஆசிரியை என்பதோடு, ஜனாதிபதி கல்லூரியை உருவாக்கி அதன் பிரதி அதிபராகவும் செயற்பட்டிருந்தார். அத்தோடு ரோஹினி கேட்வே கல்லூரி ஆரம்பிப்பதில் முக்கியமான பாத்திரத்தை (விசேடமாக ஆரம்ப பாடசாலையை நிர்வாகம் செய்வதில்) எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டிகள் அட்டவணை

  • 15 வயதுக்கு கீழ்ப்பட்ட அணிகளுக்கான போட்டி (மியூசியஸ் எதிர் கேட்வே)  – ஜூன் 30 – பி.ப. 2.30 மணி
  • கண்காட்சிப் போட்டி (விசாகா எதிர் மியூசியஸ்) – ஜூன் 30 – பி.ப. 3.15 மணி
  • 20 வயதுக்கு கீழ்ப்பட்ட அணிகளுக்கான போட்டி (மியூசியஸ் எதிர் கேட்வே, பெரும் போட்டி) – ஜூன் 30 – பி.ப. 4 மணி

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<