முரளி கிண்ணம் 2016 – செப் 24 : போட்டி முடிவுகள்

2016ஆம் ஆண்டுக்கான முரளி கிண்ண போட்டிகளின் ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டிகள் இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றன. இந்தப் போட்டிகளில் காலி மஹிந்த மற்றும் கொழும்பு நாலந்த கல்லூரி அணிகள் வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகின.

இன்று நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்

 1ஆவது அரையிறுதிப் போட்டி 

சீனிகம இணைந்த கல்லூரிகள் எதிர் காலி மஹிந்த கல்லூரி

சீனிகம இணைந்த கல்லூரிகள் மற்றும் காலி மஹிந்த கல்லூரி அணிகளுக்கு இடையிலான 1ஆவது அரையிறுதிப் போட்டி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி மஹிந்த கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

காலி மஹிந்த கல்லூரி – 139/9 (20) கவிந்து எதிரிவீர 41, நிபுன் மலிங்க 18, வினுற துல்சர 17, நிமேஷ் மெண்டிஸ் 24/3, சத்சர டி சில்வா 21/2

சீனிகம இணைந்த கல்லூரி – 132/9 (20) நிமேஷ் மெண்டிஸ் 42, கவீஸ் தில்ரங்க 35, ரவின் யசஸ் 25, நிபுன் மலிங்க 17/3, ரேஷன் கவிந்த 18/2

காலி மஹிந்த கல்லூரி 7 ஓட்டங்களால் வெற்றி


 2ஆவது அரையிறுதிப் போட்டி 

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி எதிர் கொழும்பு நாலந்த கல்லூரி

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு நாலந்த கல்லூரி  அணிகளுக்கு இடையிலான 2ஆவது அரையிறுதிப் போட்டி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி – 120/8 (20) நிபுன் சுமனசிங்ஹ 31, பஹன் பெரேரா 31*, ரெவென் கேலே 25, உமேக்ஷ டில்ஷான் 23/3, லக்ஷித மனசிங்ஹ 19/3

கொழும்பு நாலந்த கல்லூரி – 126/5 (19.4) டில்ஹார பொல்கம்பல 34, . கஸ்தூரி ஆராச்சி 22, கசுன் சந்தருவன் 19*, பஹன் பெரேரா 7/1, ருச்சிர ஏக்கநாயக்க 22/1

கொழும்பு நாலந்த கல்லூரி அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி


நிட்டம்புவ பெண்கள் அணி எதிர் வடக்கு / கிழக்கு இணைந்த பெண்கள் அணி

நிட்டம்புவ பெண்கள் அணி மற்றும்  வடக்கு / கிழக்கு இணைந்த பெண்கள்  அணிகளுக்கு இடையிலான போட்டி மாங்குளம் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  வடக்கு / கிழக்கு இணைந்த பெண்கள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

வடக்கு / கிழக்கு இணைந்த பெண்கள் அணி – 54/10 (13.2) வீ. சரண்யா 11, கே. க்ரிஷிகா 09, பி. யதுஷானி 08, றுவணி மதுஷிகா 16/2, பூர்ணிமா செவ்வந்தி 16/2

நிட்டம்புவ பெண்கள் அணி – 57/3 (5.4) சச்சினி டில்ஷானி டி சில்வா 23*, றுவணி மதுஷிகா 14*, வீ. சரண்யா 22/1

நிட்டம்புவ பெண்கள் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி


மாத்தளை பெண்கள் அணி எதிர் மொனராகல பெண்கள் எகடமி அணி

மாத்தளை பெண்கள் அணி மற்றும் மொனராகல பெண்கள் எகடமி  அணிகளுக்கு இடையிலான போட்டி மாங்குளம் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாத்தளை பெண்கள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

மாத்தளை பெண்கள் அணி – 105/7 (15) ரபி ரஜிந்தா 33, நிலுகா அமரசேன 17, கிமந்தி வத்தேகெதர 12, சித்தாரா மதுவந்தி 12/3, சேதன விமுக்தி 26/2

மொனராகல பெண்கள் எகடமி அணி – 49/10 (11.5) ஷானிகா மதுஷானி 24, பேசல ரனஹன்சி 05, தில்ருக்ஷி அரம்பேகொட 11/4, கிமந்தி வத்தேகெதர 4/1

மாத்தளை பெண்கள் அணி 56 ஓட்டங்களால் வெற்றி


சீனிகம பெண்கள் அணி எதிர் பொலன்னறுவை பெண்கள் அணி

சீனிகம பெண்கள் அணி மற்றும் பொலன்னறுவை பெண்கள் அணிகளுக்கு இடையிலான போட்டி மாங்குளம் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  சீனிகம பெண்கள் அணி  முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டியின் சுருக்கம்

சீனிகம பெண்கள் அணி – 136/6 (15)உமேஷா திமேஜெனி 40, சத்யா சந்தீபனி 25*, பூஜா ரஷ்மி 18, தமாஷா செவந்தி 21/1, நிலூபா குமாரி 16/1

பொலன்னறுவை பெண்கள் அணி – 54/9 (15) நயோமி சாகரிகா 10*, மதுஷானி சசிகலா 13, கயனி டில்ருக்ஷி 11, டி. சதுரங்கி 3/2, சத்யா சந்தீபனி 8/1, சச்சினி நிசன்சலா 9/1  

சீனிகம பெண்கள் அணி 82 ஓட்டங்களால் வெற்றி

முரளி கிண்ணத்தின் ஆண்கள் பிரிவுக்கான இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த மாபெரும் இறுதிப் போட்டியில் காலி மஹிந்த கல்லூரி மற்றும் கொழும்பு நாலந்த கல்லூரி அணிகள் மோதவுள்ளன.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

schoolscricketcrawler