ரிஷாப் பாண்ட்டின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணிக்கு முதல் வெற்றி

342
Image Courtesy - IPL Twitter

ஐ.பி.எல். தொடரில் இன்று (24) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ரிஷாப் பாண்ட்டின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

அற்புத சுழற்பந்தினால் சென்னை அணிக்கு முதல் வெற்றி

இந்தியாவில் இன்று (23) ஆரம்பமாகியுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட்…

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று பந்து வீசுவதற்கு தீர்மானித்த மும்பை இந்தியன்ஸ் அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.  டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் சிரேயாஷ் ஐயர் மற்றும் ப்ரித்திவி ஷாவ் ஆகியோரது விக்கெட்டுகள் முதல் 6 ஓவர்களுக்குள் வீழ்த்தப்பட்டது.

எனினும், இதன் பின்னர் சிக்கர் தவான், கொலின் இங்ரம் மற்றும் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரிஷாப் பாண்ட் ஆகியோர் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் ஓட்ட எண்ணிக்கையை 213 ஆக உயர்த்தினர். நிதானமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த சிக்கர் தவான் 36 பந்துகளுகளில் 43 ஓட்டங்களை பெற்றார்.

இதில் முக்கியமாக கொலின் இங்ரமுடன் இணைந்து சிக்கர் தவான் 83 ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டத்தை பகிர்ந்திருந்தார். கொலின் இங்ரம் 47 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழக்க, இறுதியாக தனது அதிரடி மூலம் மைதானத்தை அலங்கரித்த ரிஷாப் பாண்ட் 27 பந்துகளில் 78 ஓட்டங்களை விளாசினார். இவர் மொத்தமாக 7 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகளை விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரிஷாப் பாண்ட்டின் அபார அரைச்சதத்தின் உதவியுடன் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்து வீச்சில் மிச்சல் மெக்லானகன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து சவாலான இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, சீறான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்து 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதில், ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக துடுப்பெடுத்தாடவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியில் எதிர்பார்க்கப்பட்ட துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்காத நிலையில், யுவராஜ் சிங் மாத்திரம் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அரைச்சதம் கடந்தார். யுவராஜ் சிங் 35 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இவருக்கு அடுத்தப்படியாக குர்னால் பாண்டியா 32 ஓட்டங்களையும், குயிண்டன் டி கொக் 27 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

அண்ட்ரூ ரசலின் அதிரடி மூலம் முதல் வெற்றியை சுவைத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சன் ரைஸஸ் ஹைதரபாத் அணிக்கெதிரான போட்டியில் அண்ட்ரூ ரசலின் அதிரடி மூலம்…

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சில் இசான் சர்மா மற்றும் காகிஸோ ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினர். இதன்படி, 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி இவ்வருடத்தின் முதல் வெற்றியை சுவைத்துள்ளது.

போட்டி சுருக்கம்

டெல்லி கெப்பிட்டல்ஸ்  – 213/6 (20), ரிஷாப் பாண்ட் 78 (27), கொலின் இங்ரம் 47 (32), சிக்கர் தவான் 43 (36), மிச்சல் மெக்லானகன் 40/3

மும்பை இந்தியன்ஸ் – 176/10 (20), யுவராஜ் சிங் 53 (35), குர்னால் பாண்டியா 32 (15),  குயிண்டன் டி கொக் 27 (16), காகிஸோ ரபாடா 2/23, இசான் சர்மா 2/34

முடிவு – டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<