இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கடந்த பருவகால தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனன்ஜய மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இணைக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியோர் இம்முறை தத்தமது அணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தொடரின் அடுத்த பருவகாலத்துக்கான தக்கவைப்பு வீரர்களின் பெயர் விபரங்களை நவம்பர் 15ம் திகதிக்கு முன்னர் வெளியிட வேண்டும் என, ஐ.பி.எல். நிர்வாகம் அணிகளுக்கு அறிவித்தல் விடுத்திருந்தது. இதனடிப்படையில் விபரங்களை பெற்றுக்கொண்ட ஐ.பி.எல். நிர்வாகம் நேற்றைய தினம் (15) தக்கவைப்பு மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் விபரங்களை வெளியிட்டுள்ளது.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் இணைந்தார் சிக்கர் தவான்
ஐ.பி.எல். (IPL) தொடரில் சன்ரைசஸ் …
வெளியிடப்பட்டுள்ள விபரங்களின் அடிப்படையில், 44 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 130 வீரர்கள் எட்டு அணிகளாலும் தக்கவைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கை அணியின் அகில தனன்ஜய மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் குறித்த அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.பி.எல். தொடரின் இறுதி பருவகாலத்தில் இலங்கை அணியிலிருந்து அகில தனன்ஜய மற்றும் துஷ்மந்த சமீர ஆகிய இரண்டு வீரர்கள் மாத்திரம் ஐ.பி.எல் தொடரில் இணைக்கப்பட்டிருந்தனர். குறித்த இருவருக்கும் ஏலத்தொகையாக தலா 50 இலட்சம் ரூபாய் (இந்திய ரூபாய்) வழங்கப்பட்டிருந்தது.
மும்பை அணிக்காக இணைக்கப்பட்டிருந்த அகில தனன்ஜய இறுதி பருவகாலத்தில் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடியிருந்ததுடன், துஷ்மந்த சமீர ராஜஸ்தான் அணிக்காக ஒரு போட்டியிலும் விளையாடியிருக்கவில்லை. இந்நிலையில் குறித்த இருவரும் இம்முறை அணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இம்முறை அணிகள் புதிதாக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. முக்கியமாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தடைக்கு முகங்கொடுத்துள்ள ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் முறையே ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்காக இம்முறை தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இறுதி பருவகாலத்தில் கொல்கத்தா அணியிலிருந்து டெல்லி அணிக்கு திரும்பிய கௌதம் கம்பீர், டெல்லி அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, டெல்லி அணியின் கிளேன் மெக்ஸ்வேல் மற்றும் ஜேசன் ரோய் ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூர் அணிக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் நியமனம்
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் இந்திய …
மும்பை அணியை பொருத்தவரை அகில தனன்ஜய, ஜே.பி.டுமினி மற்றும் முஷ்தபிசூர் ரஹ்மான் ஆகிய முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், குயிண்டன் டி கொக் பெங்களூர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, மும்பை அணியில் இணைந்துள்ளார். அதேநேரம், பெங்களூர் அணியிலிருந்து பிரெண்டன் மெக்கலம் மற்றும் கிரிஸ் வோக்ஸ் ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத் அணியிலிருந்து, அவர்களது முழுநேர விக்கெட் காப்பாளராக செயற்பட்டுவந்த விரிதிமன் சஹா, அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் கார்லஸ் பிராத்வைட் ஆகிய முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சென்னை அணியிலிருந்து மார்க் வூட் உட்பட மூன்று வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கொல்கத்தா அணியின் சார்பில் மிச்சல் ஸ்டார்க் மற்றும் மிச்சல் ஜோன்சன் ஆகிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை அந்த அணி இம்முறை கைவிட்டுள்ளது. அதேநேரம், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முன்னணி வீரர் யுவாராஜ் சிங் மற்றும் கடந்த வருடம் தக்கவைக்கப்பட்டிருந்த அக்ஷர் பட்டேலும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் அணியை பொருத்தவரை கடந்த பருவகாலத்தில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் என்ற ரீதியில் 11.5 கோடிக்கு வாங்கப்பட்ட ஜெயதேவ் உனாட்கட் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் 15 போட்டிகளில் வெறும் 11 விக்கெட்டுகளை மாத்திம் வீழ்த்தியிருந்ததால், அவரை ராஜஸ்தான் அணி விடுவித்துள்ளது. இவருடன் இலங்கை அணியின் துஷ்மந்த சமீரவையும் அந்த அணி விடுவித்துள்ளது.
2019ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் முழுமையான விபரம் இதோ…
VIVO IPL 2019 Player Contract extensions announced
Visit IPLT20.com ….