புதிய பருவத்திற்கான IPL தொடரில் ஆடுவாரா MS டோனி?

IPL 2025

137
MS Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர தலைவரான மஹேந்திர சிங் டோனி, IPL தொடரின் புதிய பருவத்திற்கான (2025) போட்டிகளில் ஆடுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. 

>>அதிரடி வெற்றியுடன் ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்ற இலங்கை<<

IPL தொடரின் மெகா வீரர்கள் ஏலம் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், தொடரில் பங்கெடுக்கும் 10 அணிகளும் தமது குழாம்களில் தக்க வைக்கும் வீரர்களின் விபரங்களை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணி உரிமையாளரான காசி விஸ்வநாதன் தாம் தக்க வைத்துக்கொள்ளக்கூடிய வீரராக  MS. டோனியை பெயரிட அவரிடம் இருந்து ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார் 

எனினும் டோனி IPL போட்டிகளில் ஆடுவதனை விரும்பும் சென்னை அணி நிர்வாகம் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் டோனியிடம் இருந்து சிறந்த முடிவு ஒன்றை எதிர்பார்க்கப்பதாக காசி விஸ்வநாதன் ESPNcricinfo செய்திச்சேவையிடம் குறிப்பிட்டுள்ளார் 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2019ஆம் ஆண்டில் ஓய்வினை அறிவித்த MS டோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் விதிமுறைகளின் அடிப்படையில் (BCCI) புதிய பருவத்திற்கான IPL தொடரில்புதுவீரராக (Uncapped)” ஆடும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார் 

இவ்வாறாக விடயங்கள் காணப்படும் நிலையிலையே டோனி தான் IPL போட்டிகளில் ஆடுவதை உறுதிப்படுத்த வேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன. 

அதேநேரம் 2025ஆம் ஆண்டு IPL போட்டிகளில் ஆடும் அணிகள் மெகா வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஆறு வீரர்களை தமது குழாம்களில் மொத்தமாக தக்க வைக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<