IPL தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக மகேந்திரசிங் டோனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அணியின் தலைவராக செயற்பட்டுவந்த ருதுராஜ் கைக்வாட் உபாதையின் காரணமாக முழு தொடரிலிருந்து விலகியுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
>>ஒலிம்பிக்கில் கிரிக்கெட் – புதிய அறிவிப்பு வெளியானது
ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது, துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்து ருதுராஜ் கைக்வாட்டின் முழங்கை பகுதியை தாக்கியிருந்தது.
குறித்த உபாதையுடன் கைக்வாட் அடுத்த போட்டிகளில் விளையாடியிருந்த போதும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட MRI பரிசோதனையில் முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக ருதுராஜ் கைக்வாட்டுக்கு பதிலாக சென்னை சுபர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவரான மகேந்திரசிங் டோனி மீண்டும் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.
மகேந்திரசிங் டோனியின் தலைமையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை சம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<