சென்னை சுபர் கிங்ஸ் அணி 2022ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் தொடரில் (IPL) அறிமுகம் செய்த இரண்டாவது இலங்கை வீரராக, “குட்டி மாலிங்க” மதீஷ பத்திரன மாறியிருந்தார்.
>> IPL தொடரிலிருந்து விலகினார் ரஹானே
சுழல்பந்துவீச்சாளரான மகீஷ் தீக்ஷனவின் பின்னர் சென்னை சுபர் கிங்ஸ் அணியில் அறிமுகம் செய்யப்பட்ட மதீஷ பத்திரன, லசித் மாலிங்க போன்ற தனது பந்துவீச்சுப் பாணி மூலம் தனது அறிமுக IPL போட்டியில் குஜாராத் டைடன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மகீஷ் தீக்ஷனவின் அறிமுகத்திற்குப் பின்னர் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்கு நம்பிக்கைகுரிய பந்துவீச்சாளராக மாறியிருக்கும், மதீஷ பத்திரன குறித்து சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவரான MS டோனி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
“போட்டியின் இறுதி ஓவர்களை (Death Overs) வீசக்கூடிய சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக அவர் (மதீஷ பத்திரன) காணப்படுவதாக நான் நினைக்கின்றேன். கொஞ்சம் மாலிங்க போன்றும் இருக்கின்றார். அவரின் பந்துவீச்சுப் பாணியைப் பார்க்கும் போது துடுப்பாட்டவீரர்கள் தவறுவிடுவதற்கான வாய்ப்பு (Margin of Error) பெரிதாக உள்ளது. அவரின் பந்துவீச்சுப்பாணி கணிப்பதற்கு சற்று கடினமாக இருக்கின்றது. அத்துடன் அவரிடம் மெதுவான முறையில் பந்துவீசுவதற்கான (Slow Ball) சிறந்த ஆற்றலும் காணப்படுகின்றது, எனவே உங்களுக்கு பந்தினை பார்ப்பதற்கான உதிரி நிமிடங்கள் தேவையாக இருக்கும்.”
சென்னை சுபர் கிங்ஸ் அணி 2022ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் பிளே ஒப் சுற்றுக்கு தெரிவாகுவதற்கான வாய்ப்பினை ஏற்கனவே தவறவிட்ட நிலையில், அவ்வணி தொடரில் எஞ்சியிருக்கும் போட்டியில் ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) ஆடவுள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<