இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் டோனி, தனது ஓய்வு குறித்து தற்பொழுது எதுவும் யோசிக்கவில்லை என அவரது முகாமையாளர் மிஹிர் திவாகர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு டோனி, இந்திய அணியில் இருந்து முழுவதாக ஓரங்கட்டப்பட்டார்.
உலகக் கிண்ணத்துடன் டோனி ஓய்வுபெற்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும் இதுவரை ஓய்வு குறித்து எந்தவொரு அறிவிப்பையும் தோனி வெளியிடவில்லை.
இதன் காரணமாக, அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பலர் கருத்து தெரிவித்தாலும், தோனி தொடர்ந்து மொளனம் காத்து வருகிறார்.
இந்நிலையில் இப்போது டோனிக்கு 39 வயது ஆகிவிட்டதால் அவர் அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவார் என பேசப்பட்டு வருகிறது.
டோனியை ஓய்வு முடிவுக்கு தள்ளாதீர்கள் – இங்கிலாந்து வீரர் எச்சரிக்கை
இதனிடையே, டோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அவரது நெருங்கிய நண்பரும், முகாமையாளருமான மிஹிர் திவாகர் இந்தியாவின் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி ஒன்றை அண்மையில் அளித்துள்ளார்.
இதில் தோனியின் ஓய்வு எப்போது என கேட்கப்பட்ட கேள்விலுக்கு அவர் பதிலளிக்கையில்,
நண்பர்களான நாங்கள் அவரது கிரிக்கெட் குறித்து பேசுவது கிடையாது. ஆனால் அவரை பார்க்கும் போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசித்த மாதிரி தெரியவில்லை.
ஐ.பி.எல். போட்டியில் விளையாட அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். அதற்காக உண்மையிலேயே கடுமையாக உழைத்தார். ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு ஒரு மாதம் முன்னதாகவே அவர் சென்னை சென்று தனது பயிற்சியை தொடங்கியது எல்லோருக்கும் தெரியும்.
Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 122
தனது பண்ணை வீட்டில் அதிக நேரத்தை செலவிட்டு வரும் டோனி உடல் தகுதியை நன்றாகவே பேணி வருகிறார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் அவர் பயிற்சியை தொடங்குவார். தற்போது எவ்வளவு வேகமாக இயல்பு நிலை திரும்புகிறது என்பதை பொறுத்தே எல்லாம் அமையும் என்று தெரிவித்தார்.
ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் டோனி தனக்கு சொந்தமான தோட்டத்தில் இயற்கை விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க