2022ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) பருவத்தில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவராக சகலதுறைவீரரான ரவீந்திர ஜடேஜா செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
முடிவுக்கு வந்தது மொயீன் அலியின் இந்திய வீசா சிக்கல்
மஹேந்திர சிங் டோனி சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதனை அடுத்து, டோனி மூலம் ரவீந்திர ஜடேஜா சென்னை சுபர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டதாக அவ்வணி வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
”MS டோனி சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பினை விட்டு விலக முடிவு எடுத்திருப்பதோடு, அணியினை இனி வழிநடாத்த ஜடேஜாவினையும் தெரிவு செய்திருக்கின்றார். இதன் மூலம் 2012ஆம் ஆண்டிலிருந்து சென்னை அணியில் இடம்பெற்றுவருகின்ற ஜடேஜா, சென்னை சுபர் கிங்ஸ் அணியினை வழிநடாத்தும் மூன்றாவது வீரராக மாறியிருக்கின்றார். இதேநேரம், டோனி இந்தப் பருவத்திலும் இதனைத் தாண்டியும் அணியில் நீடிப்பார்.” என சென்னை சுபர் கிங்ஸ் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து மஹேந்திர சிங் டோனியின் தலைமையில் IPL போட்டிகளில் பங்கெடுத்துவரும் சென்னை சுபர் கிங்ஸ் அணி இதுவைரை 204 போட்டிகளில் பங்கெடுத்து 121 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
முடிவுக்கு வந்தது மொயீன் அலியின் இந்திய வீசா சிக்கல்
இன்னும் டோனியின் தலைமையில் கடந்த பருவம் அடங்கலாக நான்கு தடவைகள் (2010, 2011, 2018, 2021) IPL சம்பியன் பட்டம் வென்றிருக்கும்
சென்னை சுபர் கிங்ஸ் அணி, ஐந்து தடவைகள் (2008, 2012, 2013, 2015, 2019) இரண்டாம் இடத்தினையும் பெற்று IPL தொடரின் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக மாறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதேவேளை ரவீந்திர ஜடேஜா சென்னை சுபர் கிங்ஸ் அணியின் மூன்றாவது தலைவராக மாறும் நிலையில் டோனி தவிர சென்னை சுபர் கிங்ஸ் அணி, முன்னர் சுரேஷ் ரெய்னாவின் தலைமையிலும் வழிநடாத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<