நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டோனிக்கு அபராதம்

329
IPLT20.COM

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றியை பெற்றிருந்த நிலையில், ஐ.பி.எல். விதிமுறையை மீறினார் என்ற குற்றத்துக்காக சென்னை அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு அவரது போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

IPL இறுதிப் போட்டியை நடத்துவதற்கான தகுதியை இழக்குமா சென்னை?

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் அரங்கில் மூன்று பார்வையாளர்கள்…

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் ஜெய்பூரில் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 151/7 ஓட்டங்களை குவித்து, சென்னை அணிக்கு 152 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

இதன் பின்னர் களமிறங்கி துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி குறைந்த வேகத்துடன் ஓட்டங்களை குவித்த நிலையில், விக்கெட்டுகளும் சரிந்தன. எனினும், அம்பத்தி ராயுடு மற்றும் மகேந்திர சிங் டோனி ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் சென்னை அணி வெற்றியிலக்கை நெருங்கியிருந்த போதும், இறுதி ஓவர் வரை ராஜஸ்தான் அணி போட்டியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.

எனினும், இந்தப் போட்டியின் இறுதி ஓவர் போட்டியின் விறுவிறுப்பை அதிகரித்திருந்தது. இறுதி ஓவருக்கு 18 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், ராஜஸ்தான் அணியின் பென் ஸ்டோக்ஸ் இறுதிப்பந்து ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ரவீந்திர ஜடேஜா சிக்ஸருக்கு அனுப்பினார். அடுத்த பந்து நோபோல் பந்தாக வீசப்பட்டதுடன், மேலதிகமாக ஒரு ஓட்டமும் பெறப்பட்டது.

அடுத்து வழங்கப்பட்ட ப்ரீ-ஹிட் பந்தில் டோனி 2 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, 4 பந்துகளுக்கு 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. எனினும், அற்புதமான யோர்க்கர் பந்தின் மூலமாக டோனி போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். மூன்று பந்துகளுக்கு 8 ஓட்டங்கள் என போட்டி மாற, பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து, துடுப்பாட்ட வீரரின் இடுப்புக்கு மேல் செல்வது போன்று இருந்ததால், பிரதான நடுவர் நோ போல் என அறிவித்தார்.

கடந்த கால அதிரடிகளை மீண்டும் ஞாபகப்படுத்திய பொல்லார்ட்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று (10) நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு…

எனினும், உடனடியாக இரண்டாவது நடுவர் குறுக்கிட்டு, குறித்த பந்து நோ போல் பந்து அல்ல என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சென்ட்னர் ஆகியோர் நடுவர்களின் வாக்குவாதத்தில் ஈடுபட, மைதானத்துக்கு வெளியில் இருந்த டோனி ஆடுகளத்துக்குள் வந்து, நடுவர்களிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

எனினும், நடுவர்கள் நோ போல் அல்ல என அறிவிக்க, கோபத்துடன் டோனி வேளியேறினார். இவ்வாறு நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு, விளையாட்டின் மகத்துவத் தன்மையை மீறினார் என்ற குற்றச்சாட்டுக்காக அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.  

எவ்வாறாயினும், இந்தப் போட்டியில் கடைசி பந்துக்கு மூன்று ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், மிச்சல் சென்ட்னர் சிக்ஸர் விளாசி சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை த்ரில் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதேநேரம், 2016ம் ஆண்டு T20I உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் கடைசி ஓவரை வீசிய பென் ஸ்டோக்ஸ், கார்லோஸ் ப்ராத்வைட்டுக்கு 4 சிக்ஸர்களை வழங்கியமையை மீண்டும் இந்தப் போட்டியில் மோசமான பந்து வீச்சின் ஊடாக ஞாபகப்படுத்தியுள்ளார்.

போட்டி சுருக்கம்

ராஜஸ்தான் றோயல்ஸ் – 151/7 (20), பென் ஸ்டோக்ஸ் 28 (26), ஜோஸ் பட்லர் 23 (10), ரவீந்திர ஜடேஜா 20/2, தீபக் சஹார் 33/2

சென்னை சுப்பர் கிங்ஸ் – 155/6 (20), மகேந்திர சிங் டோனி 58 (43), அம்பத்தி ராயுடு 57 (47), பென் ஸ்டோக்ஸ் 39/3

முடிவு – சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<