பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் மொமினூல் ஹக்கிற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>> கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ள மஹ்மதுல்லாஹ்!
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான மஹமதுல்லாஹ், கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் பிளே ஒப் சுற்றில் முல்டான் சுல்தான்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பினை இழந்த செய்தி வெளியாகி இரண்டு நாட்களின் பின்னரே மொமினூல் ஹக்கிற்கு தற்போது வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
மொமினுல் ஹக்கிற்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருக்கும் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி தேபாஷிஷ் சௌத்திரி, மொமினுல் ஹக்கிற்கு ஏற்பட்டிருக்கும் தொற்றுக்கு அவர் சிறிய அறிகுறிகளை காட்டுவதாக தெரிவித்திருந்தார்.
அதேநேரம், தனக்கு ஏற்பட்ட கொவிட் தொற்று பற்றி கருத்து வெளியிட்ட மொமினுல் ஹக், தனக்கு காய்ச்சல் அறிகுறி மாத்திரமே உள்ளதாக தெரிவித்திருந்ததோடு தனது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் இருவரும் வீட்டினுள்ளேயே தனிமைப்படுத்தலில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
>> IPL அரங்கில் ஷிகர் தவான் புதிய பதிவு
கடைசியாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் கிண்ணத்தில் விளையாடிய மொமினுல் ஹக், இந்த மாதம் நடைபெறவுள்ள பங்கபந்து T20 கிண்ணத் தொடரிலும் விளையாட எதிர்பார்க்கப்பட்டிருந்தார்.
மறுமுனையில் அபு ஜாயேத், சயீப் ஹஸன் மற்றும் மஷ்ரபி மொர்தஸா போன்ற பங்களாதேஷ் வீரர்கள் தமக்கு ஏற்பட்ட கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<