மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சிராஜிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவுபெற்றுள்ள நிலையில், ஒருநாள் தொடர் இன்று வியாழக்கிழமை (27) ஆரம்பமாகவுள்ளது.
>> டெஸ்ட் தரவரிசையில் பிரபாத் ஜயசூரிய அசுர முன்னேற்றம்
குறித்த இந்த ஒருநாள் தொடருக்கான குழாத்தில் மொஹமட் சிராஜ் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்த போதும், டெஸ்ட் தொடரையடுத்து கணுக்கால் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளதாக அணி நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.
இதனை ஆராய்ந்த இந்திய அணியின் வைத்தியக்குழாம் உபாதையை கருத்திற்கொண்டு அவரை ஒருநாள் தொடரில் இணைப்பதற்கான அனுமதியை வழங்கவில்லை. எனவே மொஹமட் சிராஜ் ஒருநாள் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவர் நாடு திரும்புவார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொஹமட் சிராஜ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதும், அவருக்கான மாற்று வீரர் அணியில் இணைக்கப்படவில்லை என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<