தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாத்திலிருந்து மொஹமட் சமி நீக்கப்பட்டுள்ளார்.
கணுக்கால் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த மொஹமட் சமி தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டிருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைவராக ஹார்திக் பாண்டியா
தொடருக்கு முன்னர் இவர் தயாராகுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதும், இவருடைய உபாதை முழுமையாக குணமடையாத காரணத்தால் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக மாற்று வீரரை இந்திய கிரிக்கெட் சபை பெயரிடவில்லை. எனினும் குழாத்தில் ஜஸ்ப்ரிட் பும்ரா, முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா, மொஹமட் சிராஜ் மற்றும் சர்துல் தாகூர் ஆகிய 5 வேகப்பந்துவீச்சாளர்கள் ஏற்கனவே பெயரிடப்பட்டிருந்தனர்.
இதேவேளை தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான குழாத்திலிருந்து தீபக் சஹார் விலகியுள்ளார். தனிப்பட்ட காரணத்துக்காக இவர் அணியிலிருந்து விலகியுள்ளதுடன், இவருக்கு பதிலாக ஆகாஷ் டீப் அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<