பாகிஸ்தான் அணியில் அடுத்த உபாதை?

310

ஆசியக் கிண்ண T20I தொடருக்கான பாகிஸ்தான் குழாத்தில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர்  மொஹமட் வஸீமிற்கு பயிற்சிகளின் போது முதுகு உபாதை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

கோஹ்லியுடன் பாபர் அசாமை ஒப்பிட வேண்டாம் – வசீம் அக்ரம்

ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் விளையாடவுள்ள முதல் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) இந்தியாவுடன் ஆரம்பமாகவுள்ள நிலையிலையே மொஹமட் வஸீமிற்கு இந்த முதுகு உபாதை ஏற்பட்டிருக்கின்றது.

இதேநேரம் மொஹமட் வஸீம் MRI பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவர் ஆசியக் கிண்ணத்தில் பங்கேற்பது பற்றியது இறுதி முடிவு வெகு விரைவில் அறிவிக்கப்படும் என ESPNcricinfo செய்திச் சேவை குறிப்பிட்டிருக்கின்றது.

ஏற்கனவே பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சஹீன் அப்ரிடி முழங்கால் உபாதை காரணமாக ஆசியக் கிண்ண T20I தொடரிலிருந்து வெளியேறியிருக்கும் நிலையில், மொஹமட் வஸீமின் உபாதையும் பாகிஸ்தான் அணிக்கு பாதகமான நிலை ஒன்றினை தோற்றுவித்திருக்கின்றது.

இதேவேளை மொஹமட் வஸீம் அணியிலிருந்து வெளியேறும் சந்தர்ப்பத்தில் ஹரிஸ் ரவுப், நஸீம் சாஹ், பிரதியீட்டு வீரராக உள்வாங்கப்பட்ட மொஹமட் ஹஸ்னைன், சாஹ்நவாஸ் தஹானி ஆகியோர் மாத்திரமே பாகிஸ்தான் அணியில் வேகப்பந்துவீச்சாளர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசியக்கிண்ணத் தொடருக்கு தகுதிப்பெற்ற ஹொங் கொங்!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அறிமுகம் பெற்ற மொஹமட் வஸீம் இதுவரை 11 T20I போட்டிகளில் தனது தாயக அணியினை பிரதிநிதித்துவம் செய்திருப்பதோடு 17 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதேவேளை ஆசியக் கிண்ண T20I தொடருக்கான பாகிஸ்தான் அணி தமது உதவி வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக உமர் ரஷீட்டினை உள்வாங்கியிருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<