பாகிஸ்தான் குழாத்தில் இணையும் மொஹமட் ஹஸ்னைன்

223

உபாதைக்குள்ளான வேகப்பந்துவீச்சாளர் சஹீன் அப்ரிடிக்குப் பதிலாக, பாகிஸ்தானின் ஆசியக் கிண்ண T20I குழாத்தில் மொஹமட் ஹஸ்னைன் இணைக்கப்பட்டிருக்கின்றார்.

>> ஆசியக்கிண்ணத்திலிருந்து வெளியேறும் பாகிஸ்தானின் முன்னணி பந்துவீச்சாளர்!

22 வயது நிரம்பிய வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் ஹஸ்னைன் தனக்கு விதிக்கப்பட்ட பந்துவீச்சு தடையில் இருந்து மீண்ட பின்னர் தேசிய அணிக்காக ஆடாது போயினும், உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகின்றார்.

அந்தவகையில் தற்போது இங்கிலாந்தின் த ஹன்ரட் தொடரில், ஓவல் இன்விசிபள் அணிக்காக விளையாடும் மொஹமட் ஹஸ்னைன் அங்கிருந்து சஹீன் அப்ரிடியின் பிரதியீட்டு வீரராக நேரடியாக ஆசியக் கிண்ண T20I தொடருக்கான பாகிஸ்தான் குழாத்துடன் இணைவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் நெதர்லாந்தில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் செல்லும் பாகிஸ்தானின் ஆசியக் கிண்ண T20I குழாத்தில் ஆசிப் அலி, ஹைதர் அலி, இப்திக்கார் அஹ்மட் மற்றும் உஸ்மான் காதிர் ஆகிய வீரர்களும் இணைந்து கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> அபாரமான முறையில் ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்தின் U19 கிரிக்கெட் அணி

பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 18 T20I போட்டிகளில் ஆடியிருக்கும் மொஹமட் ஹஸ்னைன், 17 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருப்பதோடு, மொத்தமாக 82 T20 போட்டிகளில் ஆடி 100 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<