டி20 உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெறும் மொஹமட் ஹபீஸ்

146

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனுபவ வீரரான மொஹமட் ஹபீஸ், ஓய்வுக்கு முன் டி20 உலகக் கிண்ணத்தில் விளையாட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிரேஷ் வீரர்களில் ஒருவரான 39 வயதுடைய மொஹமட் ஹபீஸ், டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும், தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி வருகிறார்

எனினும், கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியில் நிரந்தர இடத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தடுமாறி வருகின்ற அவர், இவ்வருட இறுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத் தொடருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தெரிவித்துள்ளார்

உமர் அக்மல் மீது சூதாட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் மீது அந்நாட்டு கிரிக்கெட்…

இதுகுறித்து மொஹமட் ஹபீஸ் கூறுகையில், டி20 உலகக் கிண்ணத் தொடருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.  

அதன்பிறகு டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதில் கவனம் செலுத்துவேன். பயிற்சியாளராக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் மனதில் அது எப்போது உதிக்கும் என்பது குறித்து எனக்குத் தெரியாது என தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணிக்காக 55 டெஸ்ட், 218 ஒருநாள் மற்றும் 91 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மொஹமட் ஹபீஸ், கடந்த மாதம் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடியிருந்தார்.

இதேநேரம், அண்மையில் நிறைவுக்கு வந்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் லாகூர் கிளெண்டர்ஸ் அணிக்காக 10 போட்டிகளில் விளையாடி 217 ஓட்டங்களைக் குவித்தார்.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<