சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் மொஹமட் ஹபீஸ்

357
Getty Images

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனுபவ சகலதுறைவீரரான மொஹமட் ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

>>இந்திய அணி வீரர்களுக்கு அபராதம் விதித்த ஐசிசி

அதன்படி கடந்த 2003ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச அறிமுகம் பெற்ற மொஹமட் ஹபீஸ் தன்னுடைய 18 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிரியாவிடை வழங்கியிருக்கின்றார்.

எனினும், மொஹமட் ஹபீஸ் தொடர்ச்சியாக உள்ளூர் T20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற 2020ஆம் ஆண்டின் T20 உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி மொஹமட் ஹபீஸின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்திருந்தது. இந்தப் போட்டி உள்ளடங்கலாக மொஹமட் ஹபீஸ் பாகிஸ்தான் அணிக்காக 55 டெஸ்ட் போட்டிகளிலும், 218 ஒருநாள் போட்டிகளிலும், 119 T20I போட்டிகளிலும் ஆடியிருப்பதோடு அவற்றில் மொத்தமாக 12,780 ஓட்டங்களையும், 253 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

>>சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்த 2021

இதேவேளை கடந்த 2018ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்த மொஹமட் ஹபீஸ், அதிக T20I உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய வீரராகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதோடு, T20I போட்டிகளில் பாகிஸ்தான் அணியினை வழிநடாத்தியிருக்கும் மொஹமட் ஹபீஸ் தான் வழிநடாத்தியிருந்த 29 போட்டிகளில் 11 வெற்றிகளை, பாகிஸ்தான் அணிக்காக பெற்றுக்கொடுத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க