பாகிஸ்தான் அணியில் இணையவுள்ள ஆமிர், சொஹைப் மலிக்

190
AFP

இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள T20i கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் ஆமிர் இணைந்து கொள்வார் என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.  

அத்துடன், தனது மனைவி மற்றும் மகனை பார்ப்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் விசேட அனுமதியைப் பெற்றுக்கொண்ட மற்றுமொரு அனுபவ வீரரான சொஹைப் மலிக்கும் இந்த வாரம் இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்று பாகிஸ்தான் அணியுடன் இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மூன்று வார ஓய்வுக்கு முகங்கொடுத்துள்ள பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் குஷ்தில் ஷா

பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட், மூன்று T20i போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

இந்த நிலையில், தனது 2ஆவது குழந்தை பிறப்பதாக எதிர்பார்த்த திகதியும், இங்கிலாந்து தொடருக்கான திகதியும் ஒன்றாக வந்ததால் மொஹமட் ஆமிர் இங்கிலாந்து தொடரில் இருந்து விலகினார்

இதனிடையே, தனக்கு 2ஆவது குழந்தை பிறந்ததாக கடந்த ஜூலை 17ஆம் திகதி  மொஹமட் ஆமிர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளையில் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த இளம் வேகப் பந்துவீச்சாளரான ஹாரிஸ் ரவூப் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆறு தடவைகள் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் ஐந்து தடவைகள் வைரஸ் தொற்று இருப்பது என உறுதிப்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக, ஹாரிஸ் ரவூப்புக்குப் பதிலாக மொஹமட் ஆமிரை மீண்டும் பாகிஸ்தான் அணியின் இணைத்துக் கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

Video – டிவில்லியர்ஸ் Comeback எப்போது? |Sports RoundUp – Epi 124

இங்கிலாந்து சென்று தனிமைப்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் அணியில் இணைய காலஅவகாசம் உள்ளதால் பாகிஸ்தான் அணியில் மொஹமட் ஆமிரை இணைத்துக் கொள்வதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது

இதன்படி, இங்கிலாந்து புறப்படுவதற்கு முன் மொஹமட் ஆமிருக்கு இரண்டு தடவைகள் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படும். இதன் முதல் பரிசோதனை நேற்றுமுன்தினம் (21) மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது பரிசோதனை நாளை மறுநாள் (24) மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

எனவே, குறித்த இரண்டு பரிசோதனைகளிலும் மொஹமட் ஆமிருக்கு கொவிட் – 19 தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் அவர் இந்த வார இறுதியில் இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி இடது கை வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் ஆமிர். டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் மற்றும் T20i போட்டிகளில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கொவிட்-19 இலிருந்து மீண்ட காஷிப் பட்டி பாகிஸ்தான் அணியுடன் இணைவு

இதுஇவ்வாறிருக்க, பாகிஸ்தான் அணியின் அனுபவமிக்க வீரரான சொஹைப் மலிக்கும் இந்த வாரம் பாகிஸ்தான் அணியுடன் இணைந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது

இங்கிலாந்துபாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட T20i கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 28ஆம் திகதி மன்செஸ்டரில் நடைபெறவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க