பாக். அணியின் வட்ஸ்அப் குழுவிலிருந்து வெளியேறிய ஆமிர், ஹசன் அலி

141
Pakistan Cricket

பாகிஸ்தான் அணியின் வட்ஸ்அப் குழுவிலிருந்து மொஹமட் ஆமிர் மற்றும் ஹசன் அலி ஆகிய இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களும் வெளியேறியுள்ளார்கள்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காலப்பகுதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அந்த அணியில் உள்ள வீரர்களுக்காக வட்ஸ்அப் குழு ஒன்றை ஆரம்பித்து அதில் அனைத்து வீரர்களையும் இணைத்துள்ளது.  

அந்நாட்டு கிரிக்கெட் சபையின் உடற்தகுதி தொடர்பான தகவல்களுக்காக இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வருடாந்த ஒப்பந்தத்தில் முன்னணி வீரர்கள் நீக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தில் பல இளம் வீரர்கள் உட்பட மொத்தமாக 21 வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில், கடந்த வாரம் 2020-21 ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டது. ஜூலை 1 முதல் இந்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.  

இதில் அந்த அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களான ஹசன் அலி, வஹாப் ரியாஸ், மொஹமட் ஆமிர் ஆகிய மூன்று வீரர்களும் புதிய ஒப்பந்தத்தில் உள்வாங்கப்படவில்லை. அதேபோல, முன்னாள் தலைவரான சர்பராஸ் அஹமட், பிரிவிலிருந்து பி பிரிவுக்கு தரமிறக்கப்பட்டார்

இதனிடையே, ஹசன் அலி, வஹாப் ரியாஸ், மொஹமட் ஆமிர் ஆகிய மூவரும் ஒப்பந்தத்தில் இடம்பெறாவிட்டாலும் பாகிஸ்தான் அணியில் தேர்வாவதில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

இதுஇவ்வாறிருக்க, பாகிஸ்தான் அணியின் வட்ஸ்அப்  குழுவிலிருந்து மொஹமட் ஆமிர் மற்றும் ஹசன் அலி ஆகிய இருவரும் விலகியுள்ளார்கள். எனினும் ஒப்பந்தம் மறுக்கப்பட்ட வஹாப் ரியாஸ் குழுவில் தொடர்ந்து நீடிக்கிறார்

இதேவேளை, ஹசன் அலி, வஹாப் ரியாஸ், மொஹமட் ஆமிர் ஆகிய மூவருக்கும் ஒப்பந்தம் வழங்கப்படாமைக்கான காரணத்தை அந்த அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவிக்கையில்

ஆமீர், ஹசன் மற்றும் வஹாப் ஆகியோருக்கு ஒப்பந்தங்களை வழங்காமல் இருப்பதற்கு தேர்வாளர்கள் கடினமாக முடிவொன்றை எடுத்துள்ளனர்

ஆனால், தொடர்ச்சியான காயம் காரணமாக ஹசன் அலி இந்தப் பருவத்தில் பெரும்பகுதியை தவறவிட்டார். ஆமீர் மற்றும் வஹாப் ஆகிய இருவரையும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட்டில் மாத்திரம் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டது” என அவர் தெரிவித்தார்

இதேநேரம், ஆமிர் மற்றும் ஹசன் அலி ஆகிய இருவரும் வட்ஸ்அப்  குழுவிலிருந்து வெளியேறியது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பயிற்சியாளர் குழுவில் உள்ள அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,  

தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் உமர் அக்மல்

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) ஒழுக்காற்று குழு விதித்துள்ள மூன்று வருட தடைக்கு

“வீரர்களுக்கு மத்திய ஒப்பந்தம் வழங்காவிட்டால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது உண்டு. ஆனாலும், மத்திய ஒப்பந்தம் கிடைக்காத அதிகமான வீரர்கள் தொடர்ந்து இந்த வட்ஸ்அப்  குழுவில் நீடிக்கின்றார்கள்

உண்மையில் ஹசன் அலி இதிலிருந்து வெளியேறியது விசித்திரமாக உள்ளது. ஏனெனில் அவர் கடந்த 8 மாதங்களாக முதுகுவலி உபாதையினால் அவதிப்பட்டு வருகிறார். எனவே, எவ்வாறு அவருக்கு மத்திய ஒப்பந்தம் வழங்க முடியும்.

ஆகையால், எமது அறிவுரைகளைக் கேட்டு உடற்தகுதியை பேணிக் கொள்ள வேண்டிய இத்தருணத்தில் அவர் எடுத்த முடிவு முட்டாள்தனமானது” என தெரிவித்தார்.  

இதனிடையே, டெஸ்ட் போட்டிகளில் இருந்து மொஹமட் ஆமிர் ஓய்வு பெற்ற பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தன்னை நடத்தும் விதத்தில் கவலையடைவதாக மொஹமட் ஆமிர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க