அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 17 பேர்கொண்ட பாகிஸ்தான் அணிக்குழாத்திலிருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமீர் நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும், 7ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது.
பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்த பங்களாதேஷ் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில்
அபுதாபி மைதானத்தில் இடம்பெற்று முடிந்திருக்கும்,…
இந்த டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசியக் கிண்ணத் தொடரில் பிரகாசிக்கத் தவறிய மொஹமட் ஆமீர் இக்குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் இடத்துக்கு வஹாப் ரியாஸ் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆமீர், ஆசியக் கிண்ணம் மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடர்களில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தவில்லை. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இறுதி இரண்டு போட்டிகளில் விக்கெட்டுகளை கைப்பற்றத் தவறிய இவர், ஆசிய கிண்ணத் தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடி, எவ்வித விக்கெட்டுகளையும் கைப்பற்றவில்லை. இதன் காரணமாக ஆமீர் டெஸ்ட் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தான் அணி இறுதியாக விளையாடிய இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மொஹமட் ஆமீர் இணைக்கப்பட்டிருந்த போதும், வஹாப் ரியாஸ் இடம்பெற்றிருக்கவில்லை. உடற்தகுதியை நிரூபிக்க தவறியதால் இங்கிலாந்து தொடரில் விளையாடும் வாய்ப்பை வஹாப் ரியாஸ் இழந்திருந்தார்.
இதே நிலையில், பாகிஸ்தான் குழாத்தில் மேலதிக விக்கெட் காப்பாளராக மொஹமட் ரிஸ்வான் இம்முறை இணைக்கப்பட்டுள்ளார். அணித் தலைவர் சர்ப்ராஸ் அஹமட் (விக்கெட் காப்பாளர்) சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த ஆண்டு 5 இன்னிங்ஸ்களில் (டெஸ்ட்) விளையாடி 11.80 என்ற சராசரியில் மொத்தமாக 59 ஓட்டங்களை மாத்திரமே அவர் பெற்றுள்ளார். இதனால், அவரது துடுப்பாட்டம் மற்றும் அணித் தலைமை விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. எனவே, இந்த தொடரில் சர்ப்ராஸ் அஹமட்டுக்கு ஒரு போட்டியில் ஓய்வு வழங்கப்படலாம் எனவும், மொஹமட் ரிஸ்வான் விளையாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் சகிப் அல் ஹசன்
பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் …
இதனிடையே ஆசியக் கிண்ணத்தில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடிய பாகிஸ்தான் அணி, அவுஸ்திரேலிய தொடருக்கான குழாத்தில் மூன்று முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களை இணைத்துள்ளது. யசிர் ஷா, மொஹமட் நவாஸ் மற்றும் சதாப் கான் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் டெஸ்ட் குழாத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக பர்க்கர் சமான், இமாம் உல் ஹக், அசார் அலி அகியோர் இணைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு வருடத்துக்கு பின்னர் ஷான் மசூட்டும் குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஒக்டோபர் 7-11ம் திகதிகளில் டுபாயில் நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி 16-20ம் திகதிகளில் அபுதாபியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணிக்குழாம்
சர்ப்ராஷ் அஹமட் (தலைவர்), பர்க்கர் சமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம், அசாட் சபீக், ஹரிஸ் சொஹைல், உஸ்மான் சல்ஹாவுதீன், யசிர் ஷா, சதாப் கான், பிலால் அசிப், மொஹமட் அப்பாஸ், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், பஹீம் அஷ்ரப், மிர் அம்சா, மொஹமட் ரிஸ்வான்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…