பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) தொடரின் நேற்றைய (13) ஆட்டத்தில் குல்னா டைகர்ஸ் அணி வீரர் மொஹமட் ஆமிர் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் வரலாற்றில் 8 வருடங்களுக்கு பின்னர் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.
மீண்டும் இந்திய டி20 குழாமில் ரோஹிட் சர்மா
சுற்றுலா இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான 16 ……….
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் வருடா வருடம் நாடாத்தப்பட்டு வருகின்ற பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரின் 7ஆவது பருவகாலத்திற்கான தொடர் கடந்த 2019 டிசம்பர் மாதத்திலிருந்து நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள குறித்த தொடரின் முதலாவது கொலிபயர் (Qualifier) போட்டி நேற்று (13) நடைபெற்றது.
குல்னா டைகர்ஸ் மற்றும் ரஜ்ஸாஹி ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற குறித்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் ஆமிரின் சிறப்பான பந்துவீச்சு மூலம் குல்னா டைகர்ஸ் அணி 27 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 2020 பி.பி.எல் தொடரில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இப்போட்டியில் 159 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ரஜ்ஸாஹி ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. குல்னா டைகர்ஸ் அணி சார்பாக மொஹமட் ஆமிர் 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு திரும்பும் டுவைன் பிராவோ!
அயர்லாந்து அணிக்கு எதிரான T20I தொடருக்கான ……….
மொஹமட் ஆமிர் இவ்வாறு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியதன் மூலம் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக மற்றுமொரு பாக். வீரர் மொஹமட் ஷமியின் 8 வருட சாதனையை முறியடித்துள்ளார்.
மொஹமட் ஷமி 2012ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரின் 29ஆவது லீக் போட்டியில் 3.2 ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
பி.பி.எல் தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள். (முதல் ஐந்து இடங்கள்)
- மொஹமட் ஆமிர் (குல்னா டைகர்ஸ்) – 6/17 (2020)
- மொஹமட் ஷமி (ரஜ்ஸாஹி ரோயல்ஸ்) – 5/6 (2012)
- வஹாப் ரியாஸ் (டாக்கா பிளட்டுன்) – 5/8 (2019)
- கெவன் கூப்பர் (பரிசல் புல்ஸ்) – 5/15 (2015)
- சகீப் அல் ஹசன் (டாக்கா டைனமிட்ஸ்) – 5/16 (2017)
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<