இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் சிராஜ் ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பெற்றிருக்கின்றார்.
>> கோடிகளை அள்ளிய மகளிர் பிரீமியர் லீக் அணிகள் ; எவ்வளவு தெரியுமா?
அதன்படி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் ஏற்கனவே முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் ட்ரென்ட் போல்டினை தற்போது பின்தள்ளியிருக்கும் மொஹமட் சிராஜ் தற்போது 729 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றிருக்கின்றார்.
இந்திய அணி அண்மையில் விளையாடிய நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் பிரகாசித்ததே மொஹமட் சிராஜ் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பெறுவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.
மறுமுனையில் தனது முதலிடத்தை பறிகொடுத்த ட்ரென்ட் போல்ட் தற்போது 708 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் காணப்படுகின்றார். அதேவேளை இரண்டாம் இடத்தில் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளரான ஜோஸ் ஜேசல்வூட் 727 புள்ளிகளுடன் காணப்படுகின்றார்.
முதல் ஐந்து இடங்களில் ஏனைய வீரர்களின் நிலைகளைப் பார்க்கும் போது நான்காம் இடத்தில் மிச்சல் ஸ்டார்க் 665 புள்ளிகளுடனும், ஐந்தாம் இடத்தில் ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழல் வீரரான ரஷீட் கானும் காணப்படுகின்றனர்.
இதேநேரம் 6ஆம், 7ஆம் இடங்களில் அவுஸ்திரேலிய அணியின் அடம் ஷம்பா (655 புள்ளிகள்), சகீப் அல் ஹஸன் (652 புள்ளிகள்) ஆகியோரும் 8ஆம், 9ஆம் இடங்களில் முறையே சஹீன் அப்ரிடி (641 புள்ளிகள்) மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் (638 புள்ளிகள்) ஆகியோரும் காணப்படுகின்றனர்.
ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கான் அணியின் மற்றுமொரு சுழல்வீரர்களில் ஒருவரான முஜிபுர் ரஹ்மான் 10ஆம் இடத்தில் காணப்படுகின்றனர்.
>> ஒரு ஓட்டத்தால் அதிர்ச்சித்தோல்வியடைந்த இலங்கை U19 மகளிர் அணி
இலங்கை கிரிக்கெட் அணியினைப் பொறுத்தவரை 531 புள்ளிகளுடன் 23ஆவது இடத்தில் காணப்படும் வனிந்து ஹஸரங்க, ஒருநாள் போட்டிகள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை சார்பில் சிறந்த நிலையுடன் காணப்படும் வீரராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<