லிவர்பூல் கால்பந்துக் கழகத்தின் முன்கள வீரர் முஹமட் சலாஹ் இங்கிலாந்தின் தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கத்தின் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார். எகிப்து நாட்டவர் ஒருவர் இந்த விருதை வெல்வது இது முதல் முறையாகும்.
எகிப்தின் சலாஹ்வுக்கு அரேபியாவின் சிறந்த கால்பந்து வீரர் விருது
கொழும்பு ஸாஹிரா கல்லூரி கால்பந்து அணியின்… இதேநேரம் ,..
கடந்த ஆண்டு இத்தாலியின் ரோமா கழகத்தில் இருந்து லிவர்பூல் அணியுடன் இணைந்தது தொடக்கம் சலாஹ் அனைத்து போட்டிகளிலும் சோபித்து மொத்தம் 41 கோல்களை போட்டுள்ளார். அவரது சிறப்பான ஆட்டத்தின் உதவியோடு லிவர்பூல் அணி சம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறியதோடு, பிரீமியர் லீக்கில் முதல் நான்கு இடங்களுக்கு வரும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.
‘இது ஒரு மிகப்பெரிய கௌரவமாகும். நான் கடினமாக உழைத்தேன், இதனை வென்றதை இட்டு மகிழ்ச்சி அடைகிறேன்‘ என்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை லண்டனில் நடந்த விருது வழங்கும் நிகழ்வில் சலாஹ் குறிப்பிட்டார்.
இந்த விருதுக்கான இறுதி ஆறு வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்த 25 வயதுடைய சலாஹ், வாக்கெடுப்பு மூலம் விருதுக்கு தகுதி பெற்றார். இதில் தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கத்தின் 92 பிரீமியர் லீக் மற்றும் கால்பந்து லீக் அணிகளின் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
வடக்கு கிழக்கின் கால்பந்து மேலும் முன்னேற வேண்டும் : சுனில்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கால்பந்து வீரர்களை இலங்கை …
இதன்போது இறுதி வீரர்கள் பட்டியலில் இருந்த கெவின் டி ப்ருய்னே, ஹர்ரி கேன், லெரோய் சேன், டேவிட் சில்வா மற்றும் டேவிட் டி கீ ஆகியோரை பின்தள்ளியே சலாஹ் விருதை வென்றார். எனினும், மன்செஸ்டர் சிட்டியின் சேன் இளம் வீரருக்கான விருதை வென்றார்.
சலாஹ், கடந்த பருவத்தில் 34.3 மில்லியன் பவுண்கள் என்ற சாதனைத் தொகைக்கு லிவர்பூல் அணிக்கு ஒப்பந்தமானார். கடந்த சனிக்கிழமை நடந்த வெஸ்ட் ப்ரோன் அணிக்கு எதிராக அவர் தனது 31ஆவது பிரீமியர் லீக் கோலை புகுத்தி தங்க பாதணிக்கான போட்டியில் தற்போது முதலிடத்தில் உள்ளார்.
அத்துடன் அவர் 31 கோல்களை பெற்றிருக்கும் நிலையில் பிரீமியர் லீக் பருவம் ஒன்றில் அதிக கோல்கள் பெற்றவராக அலன் ஷீரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லுவிஸ் சுவாரஸ் ஆகியோருடன் சாதனையை சமப்படுத்தியுள்ளார்.
கோபா டெல் ரே கிண்ணம் மீண்டும் பார்சிலோனா வசம்
லுவிஸ் சுவாரஸின் இரண்டு கோல்கள் மூலம் செவில்லா …
நியூகாஸ்ட்ல் வீரர் ஷீரர் 1995/96 பருவத்திலும், ரொனால்டோ மன்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 2007/08 பருவத்திலும் லுவிஸ் சுவாரஸ் 2013/14 பருவத்தில் லிவர்பூல் அணிக்காகவும் இந்த சாதனையை படைத்திருந்தனர். எனினும் சலாஹ்வுக்கு இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் இந்த சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
‘மிகச் சிறந்த வீரர்கள் சிலருடன் எனது பெயரை ஒப்பிட முடியுமாகியுள்ளது‘ என்று குறிப்பிட்ட சலாஹ், சாதனையை முறியடிப்பதே தனது எதிர்ப்பார்ப்பு என்று தெரிவித்தார். ‘பிரீமியர் லீக் சாதனையை முறியடிப்பது இங்கிலாந்து மற்றும் உலகெங்கும் மிகப்பெரிய விடயமாகும். இன்னும் மூன்று போட்டிகள் இருக்கின்றன. நான் இந்த சாதனையை முறியடிக்க விரும்புகிறேன்‘ என்றும் அவர் கூறினார்.
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…